கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ், டிஜிபி வரிசையில்! திருவனந்தபுரத்தின் மேயராகிறாரா ஸ்ரீலேகா! யார் இவர்?
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில் அதன் மேயராக யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி ஸ்ரீலேகா என்பவருக்கு இந்த மேயர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள். யார் அவர் என்பதை பார்க்கலாம்.

கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை 45 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக கைப்பற்றியுள்ளது. இங்குள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால் இந்த மாநகராட்சிக்கு மேயராக பாஜகவை சேர்ந்தவர் வருவார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அந்த வகையில் ஸ்ரீலேகா என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான இவர் பாஜகவின் முதல் மேயராக தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள்.
ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மாநகராட்சிக்குள்பட்ட சாஸ்தமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 65 வயதை நெருங்கும் அவருக்கு மேயர் பதவி கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், சாஸ்தமங்கலம் வார்டில் வேறு எந்த வேட்பாளரும் இதற்கு முன்பு இவ்வளவு வாக்குகளை பெற்றதில்லை. இந்த தீர்ப்புக்காக மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலேகா, 1987 ஆம் ஆண்டு முதல் பெண் ஐபிஎஸ் ஆனார். 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணி செய்த அவர் சிபிஐ, லஞ்ச ஒழிப்பு, தீயணைப்பு படை, மோட்டார் வாகனத் துறை, சிறைத் துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.
2017ஆம் ஆண்டு கேரளாவின் முதல் பெண் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். 33 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியில் இருந்த அவர் டிசம்பர் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை கண்டு வியந்து 2024 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இப்படி முதல் பெண் ஐபிஎஸ், முதல் பெண் டிஜிபி என பதவிகளை பெற்ற ஸ்ரீலேகா, பாஜகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications