புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சாலை விபத்தில், திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் சிக்கியது புத்தம் புதிய கார். இந்த காரில் பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்குகள் இருந்திருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் கூட 8 பேர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை 66ல் இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kerala crash

புத்தம்புது கார்

மாணவர்கள் பயணித்த புத்தம் புது காரில், டிரைவர் இருக்கை, அதற்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் மற்றும் இரண்டு கதவுகள், காரின் மேற்கூரை ஓரங்கள் ஆகிய பகுதிகளில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருந்திருக்கிறது. இந்த ஏர்பேக்குகள் வேலை செய்ய வேண்டும் எனில், காரின் என்ஜின் பகுதி வேகமாக மோத வேண்டும். இந்த மோதல் உடனடியாக சென்சாரை தூண்டி, ஏர்பேக்குகளை விடுவிக்க வைக்கும். இதெல்லாம் வெறும் 0.03 விநாடியில் நடக்கும். அதாவது நாம் கண் சிமிட்டுவதை விட சீக்கிரமாக ஏர்பேக்குகள் விரிவடைந்துவிடும்.

ஏர்பேக்குகள்

இருந்தாலும், இந்த விபத்தில் 8 பேர் உயிரிழக்க என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையின் விபத்தின் விசித்திர சூழல்தான் உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, கார் என்ஜினுக்கு அடியில்தான் சென்சார் இருக்கும். காரின் பம்பர் வேகமாக மோதும்போதுதான் சென்சார் தூண்டப்பட்டு ஏர்பேக் ரிலிஸாகும். இந்த விபத்தில் காரின் பம்பர் மற்றும் என்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது அப்படியே லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது.

அதிவேகமாக வந்த கார்

இதனால் ஏர்பேக் வேலை செய்யவில்லை. கார் அதிவேகமாக வந்ததால், வின்ஷீல்டு முழுமையாக உடைத்துக்கொண்டு, மொத்த காரும் லாரியின் அடியில் சொருகியிருக்கிறது. இதனால், காரில் பயணித்தவர்களின் தலை துண்டிக்கப்பட்டு அல்லது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற விபத்துக்களில், காரில் ஏர்பேக்குகள் விரிவடைந்திருந்தாலும் அது எந்த பலனும் தந்திருக்காது.

லாரியின் தவறு

கார் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட, அதிகமான வேகத்தில் பயணித்திருக்கிறது. வாகனங்களை ஒட்டும்போது சாலை விதிகளை சரியாக பின்பற்றுவதும், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்வதும்தான் விபத்துக்களை தடுக்கும். ஆனால், இந்த கார் பாலத்தில் இருந்து கீழே இறங்கியபோது.. நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதி வேகத்தில் வந்திருக்கிறது.

விபத்து நடந்த பகுதியில், சாலை பணிகள் நடந்துக்கொண்டிருந்ததால், டேக் டைவர்சன் என்கிற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதை மறைத்து லாரி நின்றிருந்ததால், சுதாரித்து வண்டியை திருப்புவதற்குள் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று போலீசார் கூறுகின்றனர்.

சம்பவ இடத்திலேயே பலி

விபத்து நடந்த உடன் ஆம்புலன்ஸ், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்திருக்கின்றனர். காரில் பயணித்த 8 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பின் சீட்டில் அமர்ந்திருந்தவர் மட்டும் படுகாயங்களுடன் சுயநினைவுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அவரை மீட்க வேண்டும் எனில், காரின் கதவுகளை அறுத்து எடுக்க வேண்டும். மீட்பு குழுவினர் இதை செய்வதற்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரும் உயிரிழந்துவிட்டார்.

அதிவேகம், சாலை விதிகளை மதிக்காமல் பாலத்தின் இறக்கத்தில் லாரியை நிறுத்தியது இதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று கேரள போலீசார் கூறுகின்றனர். விபத்து குறித்து லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+