‛‛நாங்க சொன்ன பெயரை வச்சாதான் நிதி’’.. கறார் காட்டும் மத்திய அரசு.. சிக்கலில் கேரள சுகாதாரத்துறை
திருவனந்தபுரம்: கேரளாவில் செயல்படும் 'குடும்ப ஆரோக்கிய கேந்த்ரம்' மருத்துவ மையங்களுக்கு 60 சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக இந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது.
மருத்துவ கட்டமைப்புகள் பலமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தேசிய அளவில் கேரளதான் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக கேரளாவில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின்கீழ் இயங்கும் 'குடும்ப ஆரோக்கிய கேந்த்ரம்' மருத்துவ மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்த மருத்துவ மையங்கள் அனைத்தும் 60 சதவிகிதம் மத்திய அரசு நிதி, 40 சதவிகிதம் மாநில அரசு நிதி என்று இயங்கி வருகிறது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இதற்கான நிதியை வழங்கவில்லை. எனவேதான் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி பிரச்னை தலை தூக்கியிருக்கிறது. இதனால் கேரளாவின் வலுவான மருத்துவ கட்டமைப்பு, பாதிக்கப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில்,
"இந்த மருத்துவ மையங்களுக்கு கேரள அரசு வழங்கியுள்ள 'குடும்ப ஆரோக்யா கேந்த்ரம்' எனும் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயரிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கிராமப்புற மக்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அந்நியமான பெயரைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். இது இந்தி மொழியில் இருக்கும் பெயர். எனவே பெயரை மாற்றாததால் நிதியை வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
உண்மையில் அவர்கள் நிதி வழங்குவதை தவிர்க்க ஏதேதோ காரணங்களை முன்வைக்கின்றனர். தொடக்கத்தில் அவர்கள் சில சின்னங்களை நாங்கள் வைத்திருந்த பெயர் பலகையில் சேர்க்க சொன்னார்கள். இப்படியாக 6 சின்னங்களை சேர்த்தோம். ஆனால் தற்போது, பெயரை மாற்றினால்தான் நிதி என்று கூறுகிறார்கள். இப்படி நிதி வழங்காமல் இருப்பதால் இந்த சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இப்படி மழுப்பலான காரணங்களுக்காக நிதி வழங்காமல் இருப்பது என்பது, நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மைக்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.
சமீப காலங்களில் மருத்துவத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் லட்சிணையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
அதாவது, கேரளாவின் மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு "மருத்துவம் மதச்சார்பற்றது. நோயாளிகளை எந்த மருத்துவரும் மதங்களால் பாகுபடுத்தி பார்ப்பதில்லை. இப்படி இருக்கும்போது இந்து கடவுளின் உருவத்தை லோகோவாக வைப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பதை போல இருக்கிறது" என்று கூறி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications