Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஆபத்து.. கேரளாவில் பரவியது நிபா வைரஸ்.. 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மேலெழுந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி உயிரிழந்தனர். இவர்கள் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர்.

Central Health Department announced that 2 people have died due to Nipah virus in Kerala

அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சிலரும் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் தீவி்ரமாக பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் குறித்த இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பன்றி மற்றும் வௌவால் ஆகியவற்றிலிருந்து பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Central Health Department announced that 2 people have died due to Nipah virus in Kerala

இதனையடுத்து கேரளா முழுவதும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. மர்ம காய்ச்சலாக இருந்தால் அது தொடர்பான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிபா வைரஸ் என்றால் என்ன?: இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒருவகை வைரஸ். தொடக்கத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் பின்னர் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதனுக்கும் பரவுகிறது. பெரும்பாலும் பழ வௌவால்களிடமிருந்து இந்த வைரஸ் பரவுவதாக ஆய்வார்கள் கூறுகின்றனர்.

இந்த வௌவால்கள் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த நாடுகளில் நிபா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வௌவால்களிலிருந்து பன்றிகளுக்கும், அதிலிருந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் கடந்த 1998ம் ஆண்டுதான் இந்த ரைவஸ் பாதிப்பு சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பாதிப்பிலிருந்து மனிதர்களை காக்க ஆயிரக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டன. இது அப்போதைய சிங்கப்பூரில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

எப்படி பரவுகிறது?: இந்த வைரஸ் தாக்கப்பட்ட வௌவால்கள் பழங்களை கடிக்கும்போதும், பழங்களின் மீது சிறுநீர் கழிக்கும்போதும் அந்த பழங்களில் வைரஸ் தங்கிவிடுகிறது. இந்த பழங்களை மனிதர்கள் சாப்பிடும்போது வைரஸ் நேரடியாக மனிதர்களுக்கு பரவுகிறது. அதேபோல, இந்த பழங்களை பன்றிகள் சாப்பிடும்போது பன்றிகளின் உடலில் வைரஸ் புகுந்துவிடுகிறது. இப்போது இந்த பன்றிகளின் எச்சில், சிறுநீர் ஆகியவற்றிலிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. பின்னர் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் தொற்றிவிடுகிறது

அறிகுறிகள் என்ன?: இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளே தென்படும். இருப்பினும் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 5-14 நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்பட தொடங்கும். அறிகுறிகள் காய்ச்சலை போன்று இருந்தாலும், மருத்துவர்கள் சில தனிப்பட்ட அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளனர். இந்த அறிகுறிகள் மூலம் நிபா பாதிப்பை ஓரளவு உறுதி செய்யலாம். அதாவது, கடுமையான சுவாச தொற்று, சுவாச பிரச்னைகள், காய்ச்சல், தசை வலி, தலைவலி, தொண்டை புண், குமட்டல், வாந்தி, மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், நிமோனியா பாதிப்பு, மூளை வீக்கம் அல்லது மூளையழற்சி, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்கு படிப்படியாக முன்னேற்றம் ஆகியவை நிபா பாதிப்பின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.

இந்த தொற்று பாதிப்பிலிருந்து தப்பினாலும், வலிப்பு மற்றும் ஆளுமை மாற்றங்கள் போன்ற நீண்ட கால பக்க விளைவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+