கேரளாவில் சரித்தர சாதனை படைத்தார் பினராயி.. மீண்டும் கம்யூ. ஆட்சி.. பாஜக படுதோல்வி
திருவனந்தரபும்: கேரளாவில் சரித்தர சாதனை படைத்தார் முதல்வர் பினராயி விஜயன். அசுர பலத்துடன் மீண்டும் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி அமைகிறது.
Recommended Video
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
புதுச்சேரியில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது

கம்யூனிஸ்ட்டுகள்
கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியமைக்கப்போவது உறுதியாகி உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் கம்யூனிஸ்ட்டுகள் 99 (வெற்றி மற்றும் முன்னிலை) இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும், பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி வாரியாக ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கின்றன என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி பார்ப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 34 இடங்களில் வென்றுள்ளது. 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது ஒட்டுமொத்தமாக 62 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. இந்திய கம்யூனிஸ்ட் 11 இடங்களில் வென்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக படுதோல்வி
இந்திய தேசிய காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி மற்றும் 13 முன்னிலை என மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 11 இடங்களில் வெற்றி மற்றும் 5 இடங்களிலும் முன்னிலை என மொத்தம் 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கேரள காங்கிரஸ் (எம்) ஒரு இடத்தில் வெற்றி, 5 இடங்களில்ல் முன்னிலை வகிக்கிறது , சுயேட்சைகள் 4 இடங்களில் வென்றுள்ளார்கள். 2 இடங்களில் முன்னிலை என மொத்தம் 6 இடங்களில் சுயேட்சைகள் முன்னிலை வகிக்கிறார்கள். கேரள காங்கிரஸ் 2 இடங்களில் வென்றுள்ளது, கேரளா காங்கிரஸ்(எம்) 4 இடங்களில் வென்றுள்ளது. கேரள காங்கிரஸ்(பி) 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி 2 இடத்திலும், இந்திய புரட்சிகர மார்க்சிய கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

சிபிஎம் அதிகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25.05%% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 24.41%% வாக்குகளை பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளது. பாஜக 11.52% வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக IUML 8.36% வாக்குகளும், சிபிஐ 7.31% வாக்குகளும் பெற்றுள்ளன. கேஇசி (எம்) கட்சி 3.62%} வாக்குகள் பெற்றுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications