மெஸ்ஸியை பிடிக்காது.. வினாவுக்கு பதிலளிக்க மறுத்த 4ம் வகுப்பு மாணவி.. இணையத்தை கலக்கும் ஆன்சர் ஷீட்
திருவனந்தபுரம்: எனக்கு மெஸ்ஸியை பிடிக்காது, அதனால் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து நான் எழுத மாட்டேன் என கேரளா மாணவி ஒருவர் விடைத்தாளில் எழுதியுள்ள சம்பவம் இணையத்தையே கலக்கி வருகிறது.
விளையாட்டு, இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள், இயக்குநர், பாடகர், காமெடியன் உள்ளிட்ட பிரிவுகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை பிடிக்கும். விளையாட்டு போட்டிகள் என எடுத்துக் கொண்டால், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்டவைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி மகுடம சூடியது. 1986 ஆம் ஆண்டு மரோடோனா தலைமையில் கடைசியாக அர்ஜென்டினா அணி உலக கோப்பை வென்றது. அதன் பிறகு அவரது வழியில் மேஜிக்கை நடத்தினால் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸியின் கடைசி உலக கோப்பை போட்டி இதுவாகும்.

அர்ஜென்டினா மெஸ்ஸி
இதனால் ரசிகர்கள் அர்ஜென்டினாவுக்கும் மெஸ்ஸிக்கும் வாழ்த்துகளை கூறி வந்தனர். இந்த போட்டியையொட்டி கேரளாவிலும் விழா கோலம் பூண்டது. இதனால் மெஸ்ஸியை பற்றி தெரியாதவர்களும் அவருடைய மேஜிக்கை அன்னார்ந்து பார்த்தனர். ஆனால் கேரளாவில் நடந்த ஒரு தேர்வில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி குறித்த கேள்விக்கு கேரள மாணவி அளித்த பதில் இணையத்தையே கலக்கி வருகிறது.

முழு ஆண்டு தேர்வு
கேரள மாநிலத்தில் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் 4 ஆம் வகுப்பு மலையாள மொழித்தேர்வில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாற்று குறிப்பை எழுதவும் என 5 மதிப்பெண் கேள்வியில் கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கு மலப்புரம் மாவட்டம், திரூர் புதுப்பள்ளி சாஸ்தா ஏ.எல்.பி. பள்ளி மாணவி ரிசா பாத்திமா என்ன பதில் எழுதியிருந்தார் தெரியுமா?

கால்பந்தாட்டத்தில் நெய்மர்
"கால்பந்தாட்டத்தில் நான் பிரேசில் அணியின் ரசிகை. எனக்கு நெய்மரைத்தான் பிடிக்கும். மெஸ்ஸியை பிடிக்காது. எனவே இந்த கேள்விக்கு நான் பதில் எழுத மாட்டேன்" எழுதி வைத்திருந்தார். இந்த விடைத்தாளை ஆசிரியர் ஒருவர் போட்டோ எடுத்து பள்ளி வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த விடைத்தாள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

6 கேள்விகளில் 5 கேள்விகள்
இந்த தேர்வில் 6 கேள்விகளில் 5 கேள்விகளுக்கு மட்டும் விடை எழுதினால் போதும் என வினாத்தாளில் கூறப்பட்டிருந்தது. இதனால் முதல் 5 கேள்விகளுக்கு ரிசா பதில் எழுதியுள்ளார். எனினும் 6 ஆவது கேள்விக்கு மெஸ்ஸியை தனக்கு பிடிக்காது என எழுதி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ரிசா கூறுகையில் 6 கேள்விகளில் 5 கேள்விகளுக்குத்தான் பதில் எழுத வேண்டும். நானும் எழுதி விட்டேன்.

பதிவு செய்ய விரும்பினேன்
6 ஆவது கேள்வி சாய்ஸ்தானே விட்டுவிட நினைத்தேன். ஆனால் எனக்கு மெஸ்ஸியை பிடிக்காது என்பதை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும் மனதில் உள்ளதை வெளிப்படையாக்கூற வேண்டும் என்பதற்காகவும் அந்த பதிலை எழுதினேன். கால்பந்து என்றால் என்ன என்றே தெரியாத போதே எனக்கு நெய்மரைத்தான் பிடிக்கும். பின்னர் அந்த விளையாட்டு குறித்து நான் தெரிந்து கொண்ட பின்னர் நெய்மரை எனக்கு மிகவும் பிடித்தது.

உலகக் கோப்பை
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நெய்மர் விளையாடும் போது மட்டும் பார்த்தேன். அர்ஜென்டினா விளையாட்டை நான் பார்க்கவே இல்லை. நெய்மரின் பிரேசில் அணி தோல்வி அடைந்த போது வருந்தினேன். இனி வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணி வெல்லும் என ரிசா பாத்திமா தெரிவித்திருந்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications