கேரளாவில் கம்யூனிஸ்ட்டை காலி செய்த காங்.! முடிவுக்கு வரும் இடதுசாரி ஆதிக்கம்! தலைநகரை கைப்பற்றிய BJP
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவுக்கு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக இடதுசாரிகளுக்கு ஆதரவாக கருதப்பட்ட கிராம மற்றும் வட்டார பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கேரள வரலாற்றில் மாநகராட்சியில் பாஜக வெற்றிப்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. நான்கு மாநகராட்சிகள் அனைத்திலும், பெரும்பாலான நகராட்சிகளிலும், இடதுசாரிகளுக்கு சாதகமாக கருதப்பட்ட கிராம மற்றும் வட்டாரப் பஞ்சாயத்துகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

திருச்சூர் மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமாக மீண்டும் கைப்பற்றியுள்ளது. கொல்லம் மாநகராட்சியில், தற்போதைய நிலவரப்படி இடதுசாரி கூட்டணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மதியம் 12 மணி நிலவரப்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. முன்னிலை நிலவரம் பின்வருமாறு
மாநகராட்சிகள்
- காங்கிரஸ் கூட்டணி - 4
- இடதுசாரி கூட்டணி - 1
- பாஜக என்டிஏ - 1
நகராட்சிகள்
- காங்கிரஸ் கூட்டணி - 54
- இடதுசாரி கூட்டணி - 29
- பாஜக என்டிஏ - 2
மாவட்ட ஊராட்சி
- காங்கிரஸ் கூட்டணி - 7
- இடதுசாரி கூட்டணி - 7
- பாஜக என்டிஏ - 0
வட்டார ஊராட்சி
- காங்கிரஸ் கூட்டணி - 81
- இடதுசாரி கூட்டணி - 62
- பாஜக என்டிஏ - 0
கிராம ஊராட்சி
- காங்கிரஸ் கூட்டணி - 442
- இடதுசாரி கூட்டணி - 372
- பாஜக என்டிஏ - 25
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, காலை 11:53 மணியளவில், காங்கிரஸ் கூட்டணி 1,834 கிராம பஞ்சாயத்து வார்டுகள், 55 வட்டார பஞ்சாயத்து வார்டுகள், 1,303 நகராட்சி வார்டுகள் மற்றும் 90 மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது.
கேரளாவில் மொத்தம் 17,334 கிராம பஞ்சாயத்து வார்டுகள், 2,267 வட்டார பஞ்சாயத்து வார்டுகள், 346 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 3,240 நகராட்சி வார்டுகள் மற்றும் 421 மாநகராட்சி வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் சாஸ்தாமங்கலம் கோட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications