தனக்கு தானே குழியை தோண்டும் காங்கிரஸ்? தலையிட்ட டெல்லி தலைமை.. பறந்த முக்கிய உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குக் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் சூழலில், சில முக்கிய உத்தரவுகள் தலைமையில் இருந்து வந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் இருக்கும் சூழலில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டைப் போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை அங்குக் கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகளே ஆட்சியில் உள்ளது. இருப்பினும், அங்கு இடதுசாரிகள் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனால் தேர்தல் சுவாரசியமானதாக மாறியுள்ளது.

Congress plan for Kerala election CM Decision will be taken after poll results Unity Call Issued

கேரளா

கேரளாவில் இந்த முறை காங்கிரஸ் வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளும் சரி, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் சரி இதையே தான் காட்டுகிறது. இதை உணர்ந்தே கேரளாவில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இடதுசாரிகள் அரசுக்கு எதிராகக் கேரளக் காங்கிரஸ் தீவிரப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வி.டி. சத்தீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் ரோஸில் உள்ளனர். அதேநேரம் தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டாம் என டெல்லி காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

டெல்லி தலைமை முடிவு

ஏனென்றால் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மற்ற தலைவர்கள் அப்செட் ஆவார்கள். அவர்கள் ஆதரவாளர்கள் தேர்தலில் இறங்கி வேலை செய்ய மாட்டார்கள். இது காங்கிரஸ் வெற்றியைப் பாதிக்கும் என்பதால் தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் யார் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிலேயே டெல்லி காங்கிரஸ் தலைமை வலியுறுத்துகிறது.

தனக்கு தானே குழியை தோண்டும் காங்கிரஸ்

மேலும், கேரளத் தலைவர்கள் ஒற்றுமையைப் பேணவும், கோஷ்டிப் பூசல்களைத் தவிர்க்கவும் காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. தேர்தல் நேரத்தில் எந்தவொரு சர்ச்சைகளும் உட்கட்சிப் பூசல்களும் பொறுத்துக் கொள்ளப்படாது என்று காங்கிரஸ் தலைவர் கார்கே நேரடியாக எச்சரித்துள்ளார். கடந்த காலங்களில் கோஷ்டிப் பூசல்களே கேரளாவில் பல முறை காங்கிரஸ் காலை வாரியுள்ளது.

இந்த முறையும் கூட காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த வோட்டர் வைப் சர்வேயிலும் கூட காங்கிரஸுக்கு பெரிய சிக்கலாக உட்கட்சிப் பூசலே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே காங்கிரஸ் தலைமை நேரடியாகத் தலையிட்டுள்ளது. மீண்டும் உட்கட்சி பூசலால் வெற்றி வாய்ப்பு மிஸ் ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த எச்சரிக்கை!

100 சீட் இலக்கு

கேரளாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 140 சீட்கள் உள்ளன. அதில் 71 சீட்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். இந்த முறை 100 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு காங்கிரஸ் களமிறங்குகிறது. மேலும், தேர்தலில் சில லோக்சபா எம்பிக்களையும் கூட களமிறக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கேரளத் தேர்தல் களம்

கேரளாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதைத் தவிர பாஜகவும் களத்தில் இருந்தாலும் கூட, அங்கு பாஜக ஒற்றை இலக்கத்திலேயே வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+