கொரோனா வைரஸ் அச்சம்.. 1793 பேருக்கு கேரளாவில் தீவிர மருத்துவ பரிசோதனை!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் | Coronavirus attack in Kerala

    திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மொத்தம் 1793 பேர் சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.

    சீனா மொத்தமாக கொரோனா வைரஸ் காரணமாக குலை நடுங்கிப் போய் உள்ளது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 304பேர் பலியாகி உள்ளனர். 14000 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது.

    கேரளா இரண்டு பேர்

    கேரளா இரண்டு பேர்

    கேரளாவில் இதுவரை இரண்டு பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டார். இவர் சீனாவில் படித்து வந்தவர். வுஹன் நகரத்தில்தான் இவர் படித்து வந்தார். இரண்டு வாரம் முன் இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை

    இன்று காலை

    அதேபோல் திருச்சூரில் இன்னொருவருக்கும் இதே போல வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலைதான் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர் சில வாரங்களுக்கு முன் சீனா சென்று வந்துள்ளார். பணி நிமித்தமாக சீனா சென்றுள்ளார். அதன்பின் இந்த வாரம் தொடக்கத்தில் அவர் இந்தியா வந்துள்ளார். அதன்பின் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவரை கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் சோதனை செய்து வந்தனர்.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    இந்த நிலையில் மொத்தமாக கேரளாவில் 1793 பேர் சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களில் திருச்சூரில்தான் அதிகமான நபர்களுக்குத்தான் இந்த வைரஸ் தாக்குதல் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இவர்கள் எல்லோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். '

    22 பேர்

    22 பேர்

    மிக முக்கியமாக 22 பேருக்கு இந்த தாக்குதல் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதனால் இவர்கள் தனிப்பட்ட வார்டுகளில் வைத்து சோதிக்கப்பட்டு வருகிறார்கள். கேரளான போக அதிகமாக மகாராஷ்டிராவில் 27 பேர் சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். பெங்களூரில் 4 பேர் சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் கேரளாவில் உறுதி செய்யப்பட 2 பேர் தவிர வேறு யாருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+