கேரளா வரை வந்த கொடூர கொரோனா.. பொள்ளாச்சி, தேனி, குமரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு.. சோதனை!
கேரளாவிற்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் தற்போது பாதுகாப்பு கருதி கேரளா தமிழக எல்லையில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
திருவானந்தபுரம்: கேரளாவிற்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் தற்போது பாதுகாப்பு கருதி கேரளா தமிழக எல்லையில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இரண்டாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழத்தில் படித்து வந்தார். அவரை தொடர்ந்து இன்னொரு இளைஞருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக கேரளாவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு இப்போதே மக்கள் மாஸ்க் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதேபோல் அங்கு நோய் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் யாரை எல்லாம் சந்தித்தார்கள். யாரிடம் எல்லாம் பேசினார்கள் என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க அம்மாநில அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

தொடுதல்
இந்த கொரோனா வைரஸ் என்பது தொடுதல் மூலம் மட்டும் பரவ கூடியது அல்ல. கொரோனா வைரஸ் உள்ளவர் ஒன்றை தொட்டால், அதை தொடுபவருக்கும் இந்த வைரஸ் பரவும். அதேபோல் விலங்குகள் மூலமும் இந்த வைரஸ் பரவும். இதனால் கேரளா வரை வந்த வைரஸ் கண்டிப்பாக மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை, பெங்களூரிலும் 3 பேர் இந்த வைரஸ் தாக்குதல் அச்சத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்ன அச்சம்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தமிழக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும்- கேரளாவிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. கலாச்சார ரீதியாக, வர்த்தக ரீதியாக இரண்டு மாநிலமும் அதிக தொடர்பு கொண்டது. இதனால் கேரளாவில் பரவிய வைரஸ் தற்போது தமிழகத்திற்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனால் தமிழக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரவும்
அதன்படி இந்த வைரஸ் பரவிய இரண்டு பேரும் திருச்சசூரில்தான் இருக்கிறார்கள். ஆகவே திருச்சூருக்கு அருகே இருக்கும் பொள்ளாச்சி அதன் எல்லையில் பாதுகாப்பு, சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படும். அதுபோல் ஏதேனும் லாரிகள் வருகிறதா என்று சோதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தேனி, கன்னியகுமரி, களியக்காவிளை, மார்த்தாண்டம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பும், சோதனைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications