திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதோடு 2வது நபர்.. கேரளாவில் இன்னொருவருக்கும் பரவிய கொரோனா வைரஸ்.. தீவிர சிகிச்சை.. பதற்றம்!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் இருந்து விமானத்தில் தனி ஆளாக சென்னை வந்த பெண் | Chennai girl returns in an empty flight

    திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இரண்டாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    சீனா மொத்தமாக கொரோனா வைரஸ் காரணமாக நடுங்கிப் போய் உள்ளது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 304பேர் பலியாகி உள்ளனர். 14000 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது.

    கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு

    எத்தனை பேருக்கு அறிகுறி

    எத்தனை பேருக்கு அறிகுறி

    சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது பெங்களூர், கேரளா வரை வந்துவிட்டது. பெங்களூரில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. கேரளாவில் 9 பேருக்கு இதற்கான அறிகுறிகள் உள்ளது. இந்த 9 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இரண்டாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர் சில வாரங்களுக்கு முன் சீனா சென்று வந்துள்ளார். பணி நிமித்தமாக சீனா சென்றுள்ளார். அதன்பின் இந்த வாரம் தொடக்கத்தில் அவர் இந்தியா வந்துள்ளார். அதன்பின் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவரை கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் சோதனை செய்து வந்தனர்.

    சோதனை எப்படி

    சோதனை எப்படி

    சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை இதனால் தனி அறையில் வைத்து சோதனை செய்து வருகிறார்கள். தற்போது இவரின் உடல் நிலை சீராக இருக்கிறது. இவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழத்தில் படித்து வந்தார்.

    இந்தியா வந்தார்

    இந்தியா வந்தார்

    அங்கிருந்து கடந்த வாரம் கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக மற்றும் கேரளா எல்லையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையங்களில் தீவிரமாக மருத்துவ சோதனைகள் நடந்து வருகிறது.இதுவரை சென்னையில் இந்த நோய் அறிகுறியோடு யாரும் வரவில்லை.

    English summary
    Coronavirus attacked one more person in Kerala: A second such an outbreak in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X