கட்டி அணைத்தல், துரத்துதல்.. முகம் சுளிக்க வைக்கும் ப்ரீவெட்டிங் புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்
திருவனந்தபுரம்: சர்ச்சையான ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்குமாறு கூறியும் புதுமணத்தம்பதி அதை அகற்ற மறுத்துவிட்டனர்.
திருமணத்தினத்தன்று வீடியோ, புகைப்படங்கள் எடுப்பதை காட்டிலும் ப்ரீ வெட்டிங் வீடியோ, புகைப்படங்களை எடுப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் பல நேரங்களில் அதிக கவர்ச்சியும் எல்லை மீறும் புகைப்படங்களும் உலா வருகின்றன.
இது போன்ற ஒரு நடைமுறை கேரளாவில் அதிகளவில் பின்பற்றுகிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் லட்சுமி, ரிஷி கார்த்திக் ஆகியோருக்கு கொல்லத்தில் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

ப்ரீவெட்டிங் புகைப்படங்கள்
கார்த்திக் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். லட்சுமி தற்போதுதான் என்ஜினியரிங் முடித்துள்ளார். இந்த இளம் ஜோடி தேயிலைத் தோட்டம் ஒன்றில் வெறும் வெள்ளை துணியை போர்வையாக போர்த்தி கொண்டு சிரித்துக் கொண்டு, தழுவியபடி, ஒருவரை ஒருவர் துரத்தியபடி ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இணையத்தில் சர்ச்சை
இதை சமூகவலைதளங்களிலும் பரப்பியுள்ளார்கள். இவர்களது நெருக்கமான புகைப்படங்களால் இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. இது போன்ற புகைப்படங்கள் ஆணுறை விளம்பரத்திற்கு மட்டுமே பொருத்தமானவை என சிலர் கண்டித்தார்கள். இன்னும் சிலரோ வெள்ளை போர்வையில் இவர்கள் ஆடை அணிந்துள்ளார்களா என கேட்டனர்.

பெற்றோர்
இந்த புகைப்படங்களை நீக்குமாறு பலர் கூறியிருந்தனர். ஆனால் புதுமணத் தம்பதியோ அந்த படங்களை அகற்ற முடியாது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிபிசிக்கு லட்சுமி பேட்டி அளிக்கையில் எங்களுடையது காதல் திருமணம்தான். ஆனால் பெற்றோர் முன்னிலையில் செய்யப்பட்டது.

மறுத்த பெற்றோர்
இந்த கொரோனா காலத்தில் எங்களது திருமணம் நடைபெற்றது மறக்க முடியாது. இந்த ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை எடுக்க எங்கள் பெற்றோர் முதலில் மறுத்தனர். பின்னர் அவர்களுக்கு தெளிவாக விளக்கியவுடன் அவர்கள் ஒப்புக் கொண்டனர். வெள்ளை நிற போர்வைக்குள் நாங்கள் ஆடை அணிந்திருந்தோம்.

போட்டோஷூட்
இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த போட்டோ ஷூட் முழுவதும் நாங்கள் சிரித்து கொண்டே இருந்தோம். தேனிலவின் ஒரு பகுதியே இந்த போட்டோ ஷூட். சமூகவலைதளங்களில் எங்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆபாச படங்களில் நடிக்குமாறு என்னை கூறுகிறார்கள். போய் எங்காவது ரூம் போடுங்கள் என்கிறார்கள். இந்த புகைப்படங்களை நீக்குமாறு கூறுகிறார்கள். நாங்கள் எடுக்க மாட்டோம் என்றார் லட்சுமி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications