இதுக்கு மட்டும் வருவீங்களே! தெரியாமல் வாயை விட்ட ஷிகர் தவான்.. கொடுமைங்க! பாய்ந்து வந்த "மலையாளிகள்"
திருவனந்தபுரம்: கேரளாவில் தெருநாய்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அதை பற்றி குரல் கொடுத்த ஹிகர் தவான் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
கேரளாவில் இப்போது தெரு நாய் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாய்கள் தெருவில் அதிக அளவில் உலவி வருகின்றன.
இந்த நாய்கள் மக்களை கடிப்பதால் அங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் தெரு நாய் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தெரு நாய்
இவை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய்கள் ஆகும். இந்த நாய்கள் கடித்த காரணத்தால் சமீபத்தில் 12 வயது சிறுவன் பலியானார். அதேபோல் கோட்டயத்தில் சிறுவர்களை தாக்கிய நாய் ஒன்று.. பலரை மோசமாக கடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் தெரு நாய்களை அங்கே மக்களே அடித்து கொன்று வருகின்றனர். தெரு நாய்கள் சாலையில் வந்தால், அச்சம் காரணமாக அதை பலரும் சேர்ந்தும் கல்லால் அடித்து கொன்று வருகின்றனர்.

எதிர்ப்பு
ஆனால் இதை மாநில நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இப்படி நாய்களை மக்களே கொல்லக்கூடாது. வெறிநாய்களை சாலையில் பார்த்தால் மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக அவர்களே சட்டத்தை கையில் எடுக்க கூடாது. இது தவறு. நாங்கள் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

நடவடிக்கை
இந்த நிலையில்தான் அங்கு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாய்களை கொல்லாமல், சாகும் வரை கூண்டில் வைத்திருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மற்ற வெறி நாய்களுக்கு வேக்சின் போடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக துரிதமான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மோசம்
ஆனால் இதை வைத்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். கேரளாவில் தெரு நாய்கள் கொலை செய்யப்படுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் விஷயம் புரியாமல், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இதை விமர்சனம் செய்துள்ளார். அதில், இது மிகவும் மோசமான விஷயம். கேரளாவில் நாய்கள் மொத்தமாக கொலை செய்யப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தவான் விமர்சன செய்தார்.

தவான்
தவான் இப்படி விஷயம் புரியாமல் பேசியதற்கு நெட்டிசன்கள் கடும் பதிலடி கொடுத்துள்ளனர். இவர்களுக்கு வேலையே இல்லை. இந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் தலித் கொல்லப்படும் போது எதுவும் பேச மாட்டார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப்படும்போது எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் கேரளாவில் தெருநாய் கொலை செய்யப்பட்டால் மட்டும் வந்து பேசுவார்கள். இவர்கள் எல்லாம் வேண்டும் என்றே கேரளாவை குறி வைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications