Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாமாகுட்ட்டி".. பஸ் ஸ்டாப்பிலேயே துண்டு துண்டான 50 வயது காதலி.. லிவ் - இன் உறவு.. காரணமே வேற போல

50 வயது காதலியை கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 50 வயது காதலியை, பஸ் ஸ்டாப்பிலேயே பீஸ் பீஸாக வெட்டி கொன்றுள்ளார் ராஜேஷ்.. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சமீப காலமாகவே குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதுடன், லிவிங் டூ கெதரில் வாழ்பவர்களும் கொலையுண்டு போகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

35 துண்டுகளாக வெட்டப்பட்ட டெல்லி ஷ்ரத்தாவும் லிவிங் டூகெதரில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்தான்.. பங்களாதேஷில், அபுபக்கர் என்ற இளைஞர், கவிதா ராணி என்ற இந்து பெண்ணை வெட்டி கூறு போட்டிருந்தார்.. இந்த அபுபக்கரும், ஒரு பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்..

 லிவ் இன் வாழ்க்கை

லிவ் இன் வாழ்க்கை

திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய விருப்பம் இல்லாமல்தான், லிவிங் டூ கெதர் என்ற கலாச்சாரத்திற்குள் பலரும் நுழைந்து வருகிறார்கள்.. சம்பிரதாயம், சடங்குகள் தேவையில்லை என்று உதறி தள்ளிவிட்டு, புரிதல் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே முன்னிறுத்தி, லிவிங் டூ கெதர் வாழ்க்கையையும் ஆரம்பிக்கிறார்கள்.. அப்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தும்கூட, தங்கள் பார்ட்னர்களை அசால்ட்டாக கொலைகளை செய்து விடுகிறார்கள்.. இவர்கள் கொலை செய்வதைவிட, அந்த கொலையை மறைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான், நம் இதயத்தையே உறைந்துபோக செய்துவிடுகின்றன.

 லிவ்-இன் ரிலேஷன்ஷிப்

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்

இதோ இன்னொரு லிவிங் டூ கெதர் கொலை கேரளாவில் நடந்துள்ளது.. திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் ராஜேஷ்.. 46 வயதாகிறது.. இவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் சிந்து.. 50 வயதாகிறது.. பட்டினம் திட்டாவை சேர்ந்த இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்... கடந்த சில நாட்களாக இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.. அதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று சிந்து பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.

 பஸ் ஸ்டாப்பிங்

பஸ் ஸ்டாப்பிங்

அவரை ராஜேஷ் பார்த்துள்ளதுடன், அவரும் அதே பஸ்ஸில் ஏறிவிட்டார்.. பஸ்ஸூக்குள்ளேயே ராஜேஷ், சிந்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.. சிந்துவை பஸ்ஸைவிட்டு கீழே இறங்க சொல்லி, ராஜேஷ் சத்தம் போட்டுள்ளார். ஆனால், அந்த பெண் கீழே இறங்கவில்லை. பிறகு சிறிது நேரத்தில், அவர் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்துவிட்டதால், சிந்து கீழே இறங்கி சாலையில் நடந்து சென்றுள்ளார்.. அப்பொழுது கோபத்தின் உச்சத்தில் இருந்த ராஜேஷ், அரிவாளால் சிந்துவை சரமாரியாக வெட்டி உள்ளார்.. சிந்து அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார்..

 கூர்மை வாள்

கூர்மை வாள்

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிந்து - ராஜேஷ் இருவருக்குமே தனித்தனியாக கல்யாணம் ஆகிவிட்டது.. இருவருக்குமே ஆளுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. அதற்கு பிறகு, அவரவர் குடும்பத்தை இருவருமே பிரிந்துவந்து, இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தள்ளனர்.. 12 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்குள் அறிமுகமாகி உள்ளது.. ஆனால், 2 வருடமாகத்தான் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.. ஆரம்பத்தில், ராஜேஷை பார்த்ததுமே, சிந்து தன்னுடைய கணவனை டைவர்ஸ் செய்துவிட்டாராம்.

 ரிலேஷன்ஷிப்

ரிலேஷன்ஷிப்

அதற்கு பிறகு, வழயிலா பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறார்கள்.. கடந்த மாதம் இவர்களுக்கிடையே பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது... அதனால், கடந்த ஒரு மாதமாக ராஜேஷ் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார்.. இதனால், ராஜேஷை விட்டு பிரிந்து, வாடகைக்கு ஒரு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார் சிந்து.. ஒரு கொலை சென்றுள்ளதற்கு காரணம், வெறும் பணத்தகராறு மட்டுமே கிடையாது, சிந்துவின் கள்ளக்காதல் என்றும் சொல்கிறார்கள்.. அதனால்தான் சிந்து, கோபித்துக் கொண்டு தனியாக சென்றுவிட்டாலும், அவரைவிட்டு ராஜேஷால் இருக்க முடியவில்லையாம்.

 காதல் + கள்ளக்காதல்

காதல் + கள்ளக்காதல்

பலமுறை சிந்துவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார்.. ஆனால் சிந்து பிடிவாதமாகவே இருந்துள்ளார்.. சம்பவத்தன்றும், சிந்துவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வரவே ராஜேஷ் சென்றுள்ளதாக தெரிகிறது.. ஆனால், சிந்துவின் பிடிவாதம், ராஜேஷை கொலை வரை கொண்டுபோய்விட்டுவிட்டது என்கிறார்கள்.. சிந்துவை வாள் போன்ற ஆயுதத்தால் வெட்டினாராம் ராஜேஷ்.. இது தொடர்பான உண்மைத்தன்மையை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்த காதலியை நடுரோட்டில் காதலன் வெட்டிக்கொன்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்ல கணவனை பிரிந்தார் சிந்து.. அப்பறம் காதலன் ராஜேஷ்.. இப்போ கள்ளக்காதலன்.. அவர் யாராக இருக்கும்??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+