Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவை உலுக்கிய படகு விபத்து.. பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு.. பரிதாபமாக பலியான 7 பிஞ்சுகள்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த படகு விபத்து காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்து உள்ளது.

மலப்புரத்தில் நடந்த படகு விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரவு முழுக்க விடாமல் நடந்த மீட்பு பணிகள் தற்போதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மலாபுரத்தில் உள்ள தன்னூர் என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தூவல் தீரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே சுற்றுலா பயணிகள் சென்ற படகு இல்லம் மூழ்கி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

 Death toll of Kerala Malappuram Boat House accident increased: Rescue operation is still on

நேற்று மாயை 6.30 மணி அளவில் படகில் பயணிகள் சென்று கொண்டு இருந்த போது திடீரென கப்பல் அப்படியே குலுங்கி, பல்டி அடித்து மூழ்கி உள்ளது. இதில் நீரில் மூழ்கிய பயணிகளை மீட்கும் பணிகள் நேற்று மாலையில் இருந்து நடந்து வருகிறது.

Recommended Video

    Worst In History | Kerala Boat விபத்து நடந்தது எப்படி? அதிக உயிரிழப்பு ஏன்? | Oneindia Tamil

    அங்கே தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநில மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு விபத்து காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 17 ஆக இருந்த பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கே தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    அந்த படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. பெரும்பாலும் 39 பேர் பயணம் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், 22 பேர் பலியான நிலையில் இன்னும் 9 பேர் நீருக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     Death toll of Kerala Malappuram Boat House accident increased: Rescue operation is still on

    படகில் இருந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் சரியாகக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சம்பவத்தின் போது படகில் சுமார் 39 பேர் இருந்ததாக கூறுகின்றனர். டிக்கெட் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    படகில் இரண்டு அடுக்குகள் இருந்துள்ளன. மேல்பகுதியில் மக்கள் நிற்கும் இடமும், கீழ்பகுதியில் இருக்கைகளும் இருந்துள்ளன. இச்சம்பவம் நடக்கும் போது படகில் அதிக அளவில் கூட்டம் இருந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகள் சென்றுள்ளனர்.

    படகு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இயங்கி வந்துள்ளது. முக்கியமாக நேற்று சேவையில் ஈடுபடும் போது படகில் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் படகு உரிமையாளர் விதியை மீறி செயல்பட்டு உள்ளார். அவர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக கூறப்படுகிறது. சுற்றுலாப் படகுகளுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

     Death toll of Kerala Malappuram Boat House accident increased: Rescue operation is still on

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கே தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    மோடி இரங்கல்: கேரளாவில் ஏற்பட்ட கோர படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+