சபரிமலைக்கு போறீங்களா? ஆதார் அட்டையை மறக்காம கொண்டு போங்க.. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் டிசம்பர் 26 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால், சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக தற்போது முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலுக்கு மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கிறார்கள்.

மண்டல மகர விளக்கு பூஜைகள் நடைபெறும் கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் டிசம்பர் 26 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதனால், சபரிமலை வரும் பக்தர்களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கோண்டு வருகிறது. இந்த நிலையில் தான் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் இது தொடர்பாக கூறியதாவது:-
மண்டல மகர விளக்கு சீசனுக்கு சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உடனடி முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். முன்பதிவு செய்த பக்தர்கள், பதிவை ரத்து செய்தால் அந்த தரிசன காலி இடத்திற்கு ஏற்ப உடனடி முன்பதிவின்படி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதற்கு மறுநாள் முதல் தினமும் பூஜை நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
15.11.2024 முதல் 16.01.2025 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.
(சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது). குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official app மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications