படுக்கையறை விசும்பல்.. கார் வெள்ளையா இருக்கு, நீ "கருப்பா" இருக்கியே.. ஆற்றங்கரையில் ஒரே அக்கிரமம்
திருவனந்தபுரம்: வரதட்சணையாக ஒரு வெள்ளை கார் தந்திருக்கிறார்கள்.. 50 பவுன் நகை தந்திருக்கிறார்கள்.. இவ்வளவையும் வாங்கி கொண்டு அந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது தேவலக்கரை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் அப்துல் ஷிகாப்.. 41 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவியை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்.

அடி, உதை: காரணமே இல்லாமல் சண்டை போடுவது, மிருகத்தனமாக அடித்து உதைப்பது என மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த மனைவி, வேறு வழியில்லாமல் கொல்லம் குண்டரா போலீசில் புகார் செய்துவிட்டார்.. இதனால், மனைவி மீது, அப்துல் மேலும் வெறுப்பும் ஆத்திரமும் கொண்டார்.. இன்னும் அதிகமாகவே டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். இதற்கு மேலும் சரிப்படாது என்று முடிவெடுத்து, கணவரை டைவர்ஸ் செய்துவிட்டார் அந்த பெண்.
அதிரடி முடிவு: இதற்கு பிறகு, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஷஜீரா என்ற பெண்ணை அப்துல் 2வதாக கல்யாணம் செய்து கொண்டார். கொல்லம் மாவட்டம் புனலூர் வாளக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷஜீராவை.. 30 வயதாகிறது.. இந்த கல்யாணத்துக்கு ஷஜீராவின் குடும்பத்தினர் 50 பவுன் நகை வரதட்சணையாக தந்திருக்கிறார்கள்.. அத்துடன், ஒரு வெள்ளை கலர் காரையும் மாப்பிள்ளைக்கு சீதனமாக தந்திருக்கிறார்கள்.
இவ்வளவையும் வாங்கி கொண்ட அப்துல், 2வது மனைவியையும் டார்ச்சர் செய்ய துவங்கிவிட்டார். ஷஜீரா சற்று கலர் குறைவாக இருப்பாராம்.. மனைவி கருப்பாக இருப்பது ஷிகாப்புக்கு பிடிக்காததால், மனைவியின் நிறத்தை சொல்லி அடிக்கடி அவரை கிண்டல் செய்தும், கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார். செல்போனைக் கூட தொடக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார்.
படுக்கையறையிலும் சித்ரவதை: "வரதட்சணையாக எனக்கு தந்த கார் மட்டும் தான் வெள்ளை... மனைவியோ கறுப்பு" என்று யாரை பார்த்தாலும் அவர்களிடம் இளக்காரமாக சொல்லி கிண்டல் அடிப்பாராம் அப்துல்.. படுக்கையறையிலும் இந்த கிண்டலும், குத்தல் பேச்சும் தொடர்ந்துள்ளது.. இதனால், ஷஜீரா எந்நேரமும் கண்கசங்கியபடியே இருந்திருக்கிறார்.
திருமணமாகி, இப்படியே 7 மாதம் ஓடிவிட்டது.. கடந்த 2015, ஜூன் மாதம் சாஸ்தாம்கோட்டை பகுதியில் உள்ள ஆற்றங்கரையில், ஷஜீரா மயங்கி விழுந்துள்ளதை அந்த பகுதியில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர்.. இதனால், பதறிப்போய் அவரை மீட்டு அங்கிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ போராடியும், ஷஜீராவை காப்பாற்ற முடியவில்லை.. 3 வது நாளில் ஷஜீரா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சாஸ்தாம்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். சம்பவத்தன்று ஷஜீராவை அழைத்து கொண்டு, அப்துல் கல்லடை ஆற்றுக்கு போனாராம். அப்போதுதான், ஷஜீரா அலறி கத்தியவாறே ஆற்றிலேயே மயங்கி விழுந்துள்ளார்.. அந்த அலறலை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடோடி சென்று பார்த்துள்ளனர். அப்போது, போனில் யாருடனோ பேசிக்கொண்டே நின்றிருந்தாராம்.
ஆற்றங்கரை: உடனே அப்துலிடம், "என்ன சத்தம்" என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அப்துல், யாரோ ஒருத்தர் ஆற்றில் விழுந்துட்டாங்க என்று கேஷூவலாக சொன்னாராம். இதைக்கேட்டு பதறிப்போன பொதுமக்கள், ஒருவேளை தமக்கு தெரிந்தவர்கள் யாராவது ஆற்றில் விழுந்துவிட்டார்களோ என்று பதட்டத்துடன், ஆற்றில் குதித்து தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான், ஷஜீரா மயங்கிய நிலையில் கிடைத்துள்ளார். அப்போதே அனைவருக்கும் அப்துல் மீது சந்தேகம் வந்திருக்கிறது.
போலீசில் இதுகுறித்து சொல்லியும்கூட, போலீசார் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம். ஷஜீரா உயிரிழந்து, வழக்கு விசாரணையை குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிரடி கைது: பிறகு, இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டதையடுத்துதான், ஷஜீராவை அப்துல் ஆற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இவ்வளவும் கண்டுபிடித்து முடிப்பதற்குள் 8 வருடங்களாகிவிட்டது. இப்போதுதான் அப்துலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
மீன் வாங்கிட்டு வரலாம் என்று சொல்லி, பைக்கில் உட்கார வைத்து அழைத்து சென்றாராம் அப்துல்.. இதற்காக 20 கிமீ தொலைவுக்கு சென்றுள்ளார். மீன் வாங்க இவ்ளோ தூரம் எதுக்கு? என்று ஷஜீரா கேட்டும்கூட, சரியாக பதில் சொல்லவில்லையாம். கடைசியில் மீன் வாங்கவேயில்லை.. அந்த ஆற்றங்கரையிலேயே தலைவலிக்கிறது என்று சொல்லி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்துவிட்டாராம். அதற்கு பிறகுதான், ஷஜீராவை அந்த ஏரியில் தள்ளிவிட்டதாக சொல்கிறார்கள்.
நிறவெறி: இந்த "நிறவெறி" காலம் காலமாக, வல்லரசு நாடுகளில்தான் தலைதூக்கி அப்பாவி உயிர்களை பலிகடா ஆக்கி வருகிறது என்றால், நம்ம நாட்டிலும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது தொடர்ந்து வேதனையை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications