அதிசயமா இது! கேரளாவில் தேசியக் கொடி பறக்க உதவிய காகம்? உண்மையில் நடந்ததே வேற.. இந்த வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் தேசியக் கொடி ஏற்றும் போது, கொடி பறக்க முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் அப்போது அங்கு பறந்து வந்த காகம், தேசியக் கொடி பறக்க உதவியதாகவும் சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் உண்மையில் என்ன நடந்தது? என்பதை காட்டும் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.

நாட்டின் 78-வது சுதந்திர தினம் கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்டது.

national flag trend weird

இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒரு பகுதியில் மூவர்ணக் கொடி ஏற்றும் போது, கொடிக்கம்பத்தின் உச்சியில் தேசியக் கொடி சென்றதும் பறக்க முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று, தேசியக் கொடி பறக்க முடியாமல் சிக்கி கொண்டதை எடுத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் என அனைத்திலும் காட்டுத்தீ போல பரவியது. வீடியோவை பார்த்த பலரும் காகம் சரியான நேரத்தில் சிக்கலை எடுத்துவிட்டுள்ளது.. என மெய்சிலிர்க்க பதிவிட்டு வந்தனர். ஆனால், உண்மையில், அந்த காகம் கொடிக்கம்பம் அருகில் கூட வரவில்லை என்பது மற்றொரு வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

ஒருபக்கம் தேசியக் கொடி ஏற்றும் போது, அருகில் உள்ள தென்னை மரத்திற்கு காகம் பறந்து வந்துள்ளது. தேசியக் கொடி கொடிக்கம்பத்தின் உச்சிக்கு சென்றதும், அதில் உள்ள பூக்கள் கொட்டும் வகையில், கயிறை பிடித்து ஆட்டுகிறார் கொடியேற்றியவர். சரியாக தேசியக் கொடி பறக்கவும். காகவும் தென்னை மரத்தில் இருந்து திரும்பி சென்றுவிட்டது. இதை ஒரு கோணத்தில் பார்க்கும் போது காகம்தான் தேசியக் கொடியின் பறக்க முடியாமல் இருந்த சிக்கலை எடுத்துவிட்டது போல தெரிந்ததால், தெய்வாதீனம் போல இந்த காக்கையின் செயல் இருந்ததாக சொல்லி வந்தனர்.

தற்போது அதே வீடியோவின் வேறொரு கோணம் வெளியான பிறகுதான் காக்கை கொடிக்கம்பத்தின் பக்கத்தில் கூட வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முதல் வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்தவர்கள் இரண்டாவது வீடியோ மூலம் காக்கை அருகில் கூட வராததை பார்த்து உண்மையை அறிந்து கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+