ஆடையை உருவி.. ரோட்டில் வீசப்பட்ட நிர்வாண இளைஞர்.. முதுகில் "வளையல்" தடம்.. 19 வயசாம் அந்த பெண்ணுக்கு
திருவனந்தபுரம்: இளைஞர் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. என்ன நடந்தது எர்ணாகுளத்தில்?
கேரள மாநிலத்தில் வர்க்கலா செர்னியூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா... 19 வயதுதான் ஆகிறது.. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.. லட்சுமிபிரியா ஸ்கூல் படிக்கும்போதே, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. அந்த இளைஞருக்கும் தற்போது 19 வயதுதான்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர்... இந்த நிலையில் லட்சுமி பிரியா பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, காலேஜில் சேர்ந்தார்..

லட்சுமி பிரியா: அப்போது, திடீரென்று லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.. அவரை காதலிக்கவும் துவங்கினார். இந்த காதலன் வந்தபிறகு, முதல் காதலனை மறந்துவிட்டார்.. அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்திருக்கிறார்.. இதில் மனமடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை அடிக்கடி சந்தித்து, காதலை கைவிட்டு விடக்கூடாது என்று சொல்லி உள்ளார்.. ஆனாலும் அதை லட்சுமி பிரியா காதில் வாங்கவில்லை.. 2வது காதலனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.. அப்போதும்கூட மனசு கேட்காமல், லட்சுமி பிரியாவுக்கு அறிவுரை சொல்லியபடியே இருந்துள்ளார் முதல் காதலன்..
இது லட்சுமிப்பிரியாவுக்கு எரிச்சலை தந்துவிடவும், தொடர்ந்து தன்னை தொல்லைப்படுத்தினால், காலி செய்துவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.. அதையும் மீறி, லட்சுமி பிரியாவின் மீதுள்ள காதலில் தொடர்ந்து அவரை சந்திக்க முயற்சித்து வந்துள்ளார் முதல் காதலன்.. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, திடீரென முதல் காதலனை அழைத்து, நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று அழைத்திருக்கிறார்... இதைக்கேட்டதும், காதலனுக்கு நிம்மதி வந்தது..
சந்திப்பு: காதலி மனம்மாறிவிட்டாள் என்று ஆசையாக, சம்பவத்தன்று அவரை சந்திக்க வந்துள்ளார்.. அப்போது, இரண்டாவது காதலன், அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி காரில் தூக்கி போட்டு சென்று இருக்கிறார்கள். பாழடைந்த ஒரு இடத்தில், முதல்காதலனை அடைத்து வைத்து, அங்கே அவரை சித்ரவதை செய்துள்ளனர்.. பிறகு அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடம்பெல்லாம் சுட்டுள்ளனர்.. செல்போனை பறித்துக்கொண்டு, அவரிடமிருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டனர்..
இதனிடையே, மகனை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் தரவும், அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.. அப்போதுதான், சாலையோரத்தில், உடம்பெல்லாம் காயங்களுடன் இளைஞரை போலீசார் மீட்டனர்.. ஆபத்தான நிலைமையில் அவர் இருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. தீவிர சிகிச்சை ஆரம்பமானது.. இதற்கு பிறகு போலீசில் அந்த இளைஞர் வாக்குமூலம் தந்தார்.. அதில், தன்னுடைய முதுகில் வளையல்கள், மோதிரங்களால் லட்சுமி பிரியா பலமாக தாக்கினாராம்.. அடிவயிற்றிலும் எட்டி உதைத்து சித்ரவதை செய்தாராம்..

என்ன காரணம்: 2வது காதலன் தாக்கும்போது, அதை லட்சுமி பிரியா வீடியோ எடுத்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு அந்த பெண்ணை தேடிவந்தனர்.. அவரது செல்போன் சிக்னல் வைத்து, எர்ணாகுளத்தில் அவர் பதுங்கி இருப்பதை கண்டறிந்து, அங்கேயே அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்... இப்போது 2வது காதலனும், அவரது 4 நண்பர்களும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருகிறார்கள்,.
இளைஞர் வாக்குமூலம் தந்தபோதிலும், அந்த பெண்ணை தேடுவதில் சிக்கல் இருந்துள்ளது.. அதனால், இளைஞரின் செல்போன் சிக்னலை போலீசார் டிரேஸ் செய்துள்ளனர்.. அப்போதுதான், எர்ணாகுளத்தில் சிக்னல் காட்டவும், அங்கு விரைந்து சென்றபோது அந்த பெண் மட்டுமே அங்கே பதுங்கியிருந்துள்ளார்.. அவரை அழைத்து விசாரித்தபோதுதான், மொத்த உண்மையையும் சொல்லி உள்ளார்.. முதல் காதலனை தீர்த்துக்கட்ட சொல்லி லட்சுமி ப்ரியாவே ஐடியாவையும் தந்திருக்கிறார்.. கடத்தல் சம்பவம் நடப்பதற்கு முன்பு 6 பேருக்கும் மதுவிருந்தும் நடந்ததாம்..!!












Click it and Unblock the Notifications