பிரபல நடிகை ராதா செய்த காரியம்.. என்னாது ஸ்டார் ஹோட்டலா? ஆச்சரியத்தில் சினிமா பிரபலங்கள்.. என்னாச்சு
திருவனந்தபுரம்: தனது மகள் கார்த்திகா நாயருக்கு 500 பவுன் தங்க நகைகளையும் ஒரு ஸ்டார் ஹோட்டலையும் நடிகை ராதா சீதனமாக தந்துள்ளாராம்.
1980களில் தென்னிந்திய திரையுலகில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை படத்தில் மேரி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன் பிறகு அவர் டிக் டிக் டிக், அதிசய பிறவிகள், காதலித்து பார், ஆனந்த ராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, காதல் ஓவியம், ஜப்பானில் கல்யாணராமன், அம்மன் கோயில் கிழக்காலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், விஜயகாந்த், சத்யராஜ், மோகன்,பிரபு, கார்த்திக், டி ராஜேந்தர், அர்ஜுன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
இவரது மூத்த சகோதரி அம்பிகா. இவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள், கல்லாரா கிராமத்தில் கிளிமனூர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள். ராதாவின் இயற்பெயர் உதய சந்திரிகா. ராதா 1991 ஆம் ஆண்டு ஹோட்டல் அதிபரான ராஜசேகரன் நாயரை மணந்தார். இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் ஆகிய இரு மகள்களும், விக்னேஷ் நாயர் என்ற மனும் உள்ளனர்.
தனது திருமணத்திற்கு பிறகு ராதா நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் ராதா நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரையில் தலைகாட்டியுள்ளார். அவர் ஸ்டார் விஜய்யில் ஜோடி நம்பர் 1 சீசன்7, சீசன் 8 ஆகிய நிகழ்ச்சிகளில் ஒரு நடுவராக பங்கேற்றுள்ளார். ராதாவும் அம்பிகாவும் இணைந்தே நிறைய படங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ராதாவின் மகள்கள் இருவருமே நடிக்க வந்தனர். அதில் மூத்த மகள் கார்த்திகா கோ, ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இளைய மகள் துளசி, நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நடித்த கடல் படத்தில் நடித்திருந்தார். இருவருக்குமே சினிமா துறை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் கார்த்திகா தனது தந்தையின் பிசினஸை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தொழிலதிபர் ரோஹித் மேனன் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனாலும் மணமகனின் முகம் யாருக்கும் காட்டப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள காவடியார் உதயபாலஸ் மாநாட்டு அரங்கில் கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நடிகர், நடிகைகளும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராதா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மாப்பிள்ளையின் புகைப்படம் முகம் தெரியும்படியாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து கார்த்திகாவும் ரோஹித்தும் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ராதா தனது மகளுக்கு கொடுத்த சீதனம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கார்த்திகாவுக்கு நடிகை ராதா தாய் வீட்டு சீதனமாக 500 பவுன் நகைகளையும் கணவருக்கு இருக்கும் 3 நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றையும் அவருக்கு அளித்துள்ளனர். கார்த்திகாவின் தந்தைக்கு மும்பை, கேரளம், தமிழகத்தில் ஹோட்டல்கள் உள்ளன. உதய் சமுத்திரா லீஷர் பீச் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications