யார் பாருங்க.. "காக்கா" பிடிச்சு சாதித்து.. அதுக்குனு இப்படியா.. அதுவும் பேக்கரிக்குள்ள.. ஒரே மலைப்பு
கேரளாவில் இளைஞர் ஒருவர் காக்கையை செல்லமாக வளர்த்து வருகிறார்
திருவனந்தபுரம்: கொல்லம் இளைஞர் ஒருவர் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.. அத்துடன் அவரது பேக்கரியும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. என்ன காரணம்?
மனிதர்களுக்கு செல்ல பிராணிகள் என்றாலே தனி முக்கியத்துவம் தருவார்கள்.. பலரின் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் இந்த பிராணிகள் வலம் வரும்.
எத்தனையோ குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, நாய், பூனை, கிளி, போன்ற இந்த பிராணிகள்தான் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன.,. பலமடங்கு புத்துணர்ச்சியை வாரி வழங்குகின்றன.. நம்மிடம் இப்பிராணிகள் காட்டும் பாசமும், அன்பும், விசுவாசமும் எந்தவித நிபந்தனையுமற்றது..

சிதறுண்டு போனார்கள்
அதேபோல, இந்த செல்ல பிராணிகளுக்கும் உணர்வுகள் உண்டு.. கோபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், வெறித்தனம், என அத்தனை உணர்வுகளும் உண்டு.. தன்னை வளர்க்கும் ஓனர்கள் மீதுகூட இந்த பிராணிகள் பல சமயம் கோபப்பட்டுக் கொள்ளும்.. ஆனால், அடுத்த நிமிடமே, உற்சாகமாகத்தில் ஓடிவந்து நம் முன்நின்று நேசத்தை கொட்டிச்செல்லும்... இந்த அன்பில் கரைந்து காணாமல் போனவர்கள் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் சிதறுண்டு கிடக்கிறார்கள். ஆனால், கேரளாவில் ஒரு இளைஞர் நம்மையே திகைக்க வைக்கிறார்.

பேக்கரி + கண்ணீர்
காரணம், காகம் ஒன்றினை அவர் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்.. இவர் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்.. பெயர் வினோத்... பேக்கரி ஒன்றை சொந்தமாகவே நடத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, வினோத்தின் வீடு இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த பணிகளுக்கு தொந்தரவாக, வினோத்தின் வீட்டில் ஒரு தென்னை மரம் இருந்திருக்கிறது.. அதனால், அந்த தென்னை மரத்தை வினோத் கடகடவென வெட்டி சாய்த்துள்ளார்.. ஆனால் அதற்கு பிறகுதான் அந்த மரத்தில் ஒரு காக்கை கூடு இருந்த விஷயமே வினோத்திற்கு தெரியவந்திருக்கிறது.

காக்காய் குஞ்சு
மரம் தொப்பென்று சாய்ந்து கீழே விழுந்ததில் அதிலிருந்து 3 காக்கை குஞ்சுகளில் 2 பரிதாபமாக அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டது.. ஒரு காக்கை குஞ்சுக்கு மூச்சுத்திணறி கொண்டிருந்தது.. அதை பார்த்ததுமே பதறி போன வினோத், உடனடியாக அந்த காகத்தை காப்பாற்றியிருக்கிறார்... அதன் உடல்நிலையும் ஓரளவு சரியாகிவிட்டது.. ஆனால், மற்ற 2 குஞ்சுகளும் இறந்துபோனதால், குற்ற உணர்வுக்கு ஆளாகி உள்ளார்.. அதனால், காப்பாற்றிய அந்த ஒரு காக்கையை, தானே வளர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார் வினோத்.

லக்கி கேசி
அந்த காக்காவுக்கு "கேசி" ஒரு பெயரை சூட்டி உள்ளார்.. வினோத் பேக்கரியில்தான் அந்த காக்கை வளர்கிறது.. பிஸ்கட்கள், பழங்கள், சிக்கன் என தினமும் கேசிக்கு செம்ம ராஜபோக வாழ்க்கைதான்.. இதைதவிர, பேக்கரிக்கு வரும் கஸ்டமர்களுக்கும் கேசியை ரொம்ப பிடித்து போய்விட்டதாம்.. அதனால், பேக்கரிக்கு யார் வந்தாலும் அவர்களுடன் சட்டென ஒட்டிக் கொள்கிறதாம்.. நாளடைவில் அந்த ஏரியாவுக்கே செல்லப்பிள்ளையாகி விட்டதாம் கேசி.. ம்ம்ம்.. வாழ்வுதான்..!!!
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications