ராஜ்தானியை விட சீறி பாயும் வேகம்.. கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் நேர அட்டவணை, கட்டணம் என்ன?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கப் போகும் வந்தே பாரத் ரயிலானது நாட்டின் 15ஆவது ரயில் சேவையாகும். இந்த ரயில் 11 மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ளது.
திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 501 கி.மீ. தூரத்தை கடக்கும். இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தாண்டி செல்லும். 501 கி.மீ. தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 6 நிறுத்தங்களில் ரயில் நிற்கும். அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகியவை ஆகும்.

இந்த ரயிலின் எண் 20633 / 20634 ஆகும். 20633 ரயில் எண் காசர்கோடு திருவனந்தபுரம் சென்ட்ரல் வரையும் 20634 எண் கொண்ட ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் முதல் காசர்கோடு வரையும் இயக்கப்படுகிறது. இவை வியாழக்கிழமைகளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படும்.
காசர்கோடு வந்தே பாரத் ரயிலானது காசர்கோடில் இருந்து 26 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 22.35 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும். அது போல் திருவனந்தபுரத்திலிருந்து 28 ஆம் தேதி காலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் அன்று மதியம் 13.25 மணிக்கு காசர்கோடை சென்றடையும். இந்த ரயில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை விட சூப்பர் பாஸ்ட் ஆகும். அதாவது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மேற்கண்ட வழித்தடத்தை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் அடைகிறது என்றால் வந்தே பாரத் ரயிலோ 8 மணி நேரம் 5 நிமிடங்களில் அடைகிறது.
இந்த வந்தே பாரத் ரயிலில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை ரூ 1520 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ 308 உணவு கட்டணமும் அடங்கும். அது போல் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ 2815 வசூலிக்கப்படுகிறது. இதில் 369 ரூபாய் உணவு கட்டணமும் அடங்கும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.
அது போல் திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ காசர்கோடு வரை செல்ல சேர் காரில் உணவு கட்டம் ரூ 379 சேர்த்து ரூ 1590 கட்டணமாக வசூலிக்கப்படும். அது போல் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவு கட்டணம் ரூ 434 சேர்த்து ரூ 2880 பயண கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த வந்தே பாரத் ரயிலின் நேரம் குறித்த அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதில் திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே செல்லும் வந்தே பாரத் (20634) காலை 5.20 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும். இது கொல்லத்தை 6.07 மணிக்கு அடையும். அங்கு இரு நிமிடங்கள் வரை நிற்கும் இந்த ரயிலானது மீண்டும் 6.09 மணிக்கு புறப்படுகிறது. பின்னர் கோட்டயத்தை 7.25 மணிக்கு வந்தடைகிறது. அங்கும் 2 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயிலானது 7.27 மணிக்கு மீண்டும் புறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 8.17 மணிக்கு கோட்டயம் டவுனை அடையும் இந்த ரயில் அங்கு 3 நிமிடங்கள் நின்று செல்லும். அங்கிருந்து 8.20 மணிக்கு புறப்பட்டு 9.22 மணிக்கு திருச்சூரை வந்தடைகிறது. அங்கும் 2 நிமிடங்கள் நின்று 9.24 மணிக்கு மீண்டும் புறப்படும். இதைத் தொடர்ந்து 10.02 மணிக்கு ஷோரனூர் சந்திப்பை அடையும் வந்தே பாரத் ரயில் 10.04 மணிக்கு மீண்டும் புறப்படுகிறது.
மேலும் காலை 11.03 மணிக்கு கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடையும் வந்தே பாரத் , அங்கும் 2 நிமிடங்கள் நின்று 11.05 மணிக்கு புறப்படுகிறது. பின்னர் பிற்பகல் 12.03 மணிக்கு கண்ணனூரை அடையும் ரயிலானது அங்கும் 2 நிமிடங்கள் நின்று பின்னர் 12.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு காசர்கோட்டை அடைகிறது. இந்த ரயிலில் 6 கோச்சுகள் உள்ளன.
அது போல் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் (20633) காசர்கோட்டிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. அடுத்ததாக கண்ணனூரை 3.28 மணிக்கு வந்தடையும் இந்த ரயில் அங்கு 2 நிமிடங்கள் நின்று கோழிக்கோட்டிற்கு மாலை 4.28 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இது ஷோரனூர் சந்திப்பை மாலை 5.28 மணிக்கு வந்தடைகிறது. அங்கிருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு திருச்சூரை மாலை 6.03 மணிக்கு வந்தடைகிறது. அங்கு இரு நிமிடங்கள் நிற்கும் ரயிலானது எர்ணாகுளத்தை இரவு 7.05 மணிக்கு வந்தடைகிறது. அங்கு 3 நிமிடங்கள் நிற்கும் ரயில் கோட்டத்திற்கு இரவு 8 மணிக்கு வருகிறது. அங்கு இரு நிமிடங்கள் நிற்கும் இது இரவு 8.02 மணிக்கு புறப்பட்டு இரவு 9.18 மணிக்கு கொல்லத்தை அடைகிறது. அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்தை இரவு 10.35 மணிக்கு வந்தடையும்.












Click it and Unblock the Notifications