Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகர் செய்ற காரியமா இது.. அதுவும் அரசு பஸ்ஸுக்குள்ளே.. நைட்டு நேரத்தில்.. அலறிய இளம் பெண்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரபல மலையாள நடிகரை பொதுமக்களும், போலீசாரும் விரட்டிச் சென்று பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபகாலமாக பொதுவெளியில், சில காதலர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறி போய் கொண்டிருக்கின்றன.. அதிலும் டெல்லி மெட்ரோ ரயிலில், இந்த அநாகரீகங்கள் அதிகரித்தபடியே வருகின்றன.

Do you know who is this Famous Actor and what happened in the Kerala Government Bus

மெட்ரோ ரயில்: நேற்றுகூட, ஒரு காதல் ஜோடியின் வீடியோ வெளியாகியிருந்தது.. அந்த வீடியோவில் கூல்டிரிங்ஸை தன்னுடைய வாயில் ஊற்றி கொண்ட ஆண், மறுமுனையில் இருக்கும் பெண்ணின் வாயில் அந்த ஜூஸை பகிர்கிறார்..

அதே போல் அந்த பெண்ணும், வாயில் ஜூஸ் ஊற்றிக்கொண்டு, அந்த ஆணின் வாய்க்கு பகிர்கிறார்.. இவ்வளவும், பயணிகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது.. இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துவிட்டனர்.. பொதுவெளியில் இப்படியான பாலியல் அத்துமீறல்கள் அதிகரிப்பதற்கு கடும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

பாலியல் சீண்டல்: அதேபோல, பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் சீண்டல்களும் பெருகி கொண்டிருக்கின்றன.. நேற்றிரவுகூட ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.. கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்தவர் பினு பி.கமால்... இவர் அம்மாநிலத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஆவார்..

இவரது காமெடிக்காகவே, தனி ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.. இதனால், ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.. அதேபோல, மலையாள படங்களிலும் பினு பி.கமால் நடித்து இருக்கிறார்..

டிவி நிகழ்ச்சி: அப்படித்தான், நேற்றும்கூட, திருவனந்தபுரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.. இந்த நிகழ்ச்சி முடிவதற்கு இரவு நேரமாகிவிட்டது.. பிறகு, நிலமேல் பகுதிக்கு செல்வதற்காக, கேரள அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றார்.. அப்போது அவரது சீட்டுக்கு பக்கத்தில், ஒரு இளம்பெண் உட்கார்ந்திருந்தார்.

திருவனந்தபுரம் அருகே வட்டப்பாறை என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது.. அப்போது நடிகர் பினு கமால், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. நடிகரின் இந்த அத்துமீறலை பார்த்ததுமே, அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.. இதனால் ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸை, டிரைவர் நிறுத்திவிட்டார்.. நடந்த சம்பவத்தை அந்த பெண், டிரைவர், கண்டக்டரிடம் சொல்லி கொண்டிருந்தபோதே, நடிகர் பினு கமால் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார்.

வட்டப்பாறை: அவர் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடுவதை பார்த்த, பொதுமக்கள் அவரை விரட்டி கொண்டே போனார்கள்.. பஸ்ஸில் இருந்த பொதுமக்களும், பின்னடியே விரட்டி ஓடினார்கள்.. அதற்குள் வட்டப்பாறை போலீசாரும் அங்கு வந்துவிட்டனர்.. அவர்களும் சேர்ந்து பினு கமாலை விரட்டி, ஒருவழியாக மடக்கி பிடித்துவிட்டார்கள்.. அப்போதுதான், அவர், பிரபல நடிகர் என்பதை பார்த்து மொத்த பேரும் அதிர்ந்தனர்..

இரவு நேரம் என்பதால், அவரது முகம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.. இதையடுத்து, அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. விசாரணைக்குப் பிறகு நடிகரை, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை தந்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+