யார் அந்த ரோலக்ஸ்? பள்ளி மாணவிகளிடம் புழங்கும் போதை பொருட்கள்.. கேரளாவில் என்ன நடக்கிறது?
கேரளாவில் போதை பொருட்களால் பாதிக்கப்பட்ட 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடம் நடத்திய ஆய்வில், இதில் 40 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் அதிகரித்துள்ளதாக அம்மாநில சட்டம் ஒழுங்கு காவல்துறை ஏடிஜிபி எம்.ஆர். அஜித்குமார் தெரிவித்துள்ளார். பஞ்சாப் பல ஆண்டுகளாக போராடி தோல்வியடைந்த ஒரு விஷயத்திற்குள் கேரளா தற்போது காலடி எடுத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைத்தலங்களில் பரவலாக பரவியிருந்தது. அதாவது லாட்ஜ் ஒன்றில் சோதனையின்போது இளம்பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். அப்போது அப்பெண் போதையில் அலறியுள்ளார். இந்த வீடியோ கேரளாவில் போதைப்பொருள் பயன்பாடு எந்த அளவுக்கு வீரியமாக இருக்கிறது என்பதற்கு உதாரணமாக காட்டப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் போதைப்பொருட்களின் பயன்பாடு மாநிலம் முழுவதும் சுமார் 600% அதிகரித்துள்ளது. அதேபோல கைது நடவடிக்கைகளும் சுமார் 90% வரை உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார் சில தகவல்களை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, "முன்பு கல்லூரிகளில்தான் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது பள்ளிகளில் இது அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவிகள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். மட்டுமல்லாது இவ்வாறு போதைப்பொருளை பயன்படுத்தும் மாணவிகள் அதனை கொண்டு சேர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றனர்.

யோத்தவ்
இந்நிலையை மாற்ற மாநில காவல்துறை 'யோத்தவ்' (Yoddhav) எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் நோடல் அதிகாரி குமார் இது குறித்து கூறுகையில், "பெண் குழந்தைகளை போதை பொருள் பயன்பாட்டில் ஈர்க்க சக பெண்களே பயன்படுத்தப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவிகளாகவோ அல்லது அதைவிட அதிக வயது கொண்டவர்களாகவோ இருப்பார்கள். இவர்கள்தான் போதைப்பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்படி இருக்கையில், மெதுவாக பள்ளி குழந்தைகள் மத்தியில் நட்பாவார்கள்.

விநியோகம்
பின்னர் போதை பொருட்களை கொடுக்கிறார்கள். இவர்களுக்கு ரோட்டு சாப்பாட்டு கடைகள், பள்ளிக்கு அருகே உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட இடங்களிலிருந்து போதை பொருட்கள் கிடைக்கின்றன" என்று கூறியுள்ளார். இது குறித்து சக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த டெக்னிக் ஆண்களிடத்தில் பரவலாக காண முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களுக்கு மூன்றாவதாக ஒருவர் நண்பராவார். இந்த மூன்றாம் நபர் புதிய போதை பழக்கத்தை கொண்டவராவார். ஆனால் இதனை தற்போதுதான் பழகியதாகவும் எனவே நீங்களும் பழகி பாருங்கள் என்று கூறுவார்.

ரெய்டு
இப்படியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு போதை பொருள் பழக்கம் கடத்தப்படும். இதே பாணிதான் பெண்களுக்கும் பின்பற்றப்படுகிறது. இதனை தடுக்க பள்ளி அருகே உள்ள சிறிய உணவகங்கள், பெட்டிக்கடைகளில் என 18 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தி 401 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இந்த சோதனையில் 20.97 கிலோ கஞ்சா, 186.38 கிராம் எம்.டி.எம்.ஏ மற்றும் 1122.1 கிராம் ஹாஷிஷ் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 462 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படியாக பள்ளிகளில் போதை பொருட்கள் நுழைவது தடை செய்யப்பட்டது.

பயன்பாடு
ஆனால் இந்த பிரச்னை எங்களுக்கு வேறு வடிவில் எழுந்தது. அதாவது போதை பொருள் விநியோகஸ்தர்கள் டியூஷன் சென்டர்கள் வழியாக இதனை விற்பனை செய்ய தொடங்கினர். இந்த பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிகளுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்கு மாணவர்களின் பைகளிலேயே போதை பொருட்களை கண்டுபிடித்தோம்" என்று காவல்துறையினர் கூயுள்ளனர். பள்ளி குழந்தைகள் இதனை பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் இது எங்கிருந்து கிடைக்கிறது என்பதை அவர்கள் ஒருபோதும் சொல்வதில்லை என திருவனந்தபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் அஞ்சு டயஸ் கூறியுள்ளார்.

பாலியல் சுரண்டல்
இந்த போதை பழக்கம் கொண்ட மாணவிகள் அதிக அளவுக்கு பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர் விளக்கியுள்ளார். சினிமாக்களில் வருவதை போல முதலில் மாணவியை போதைக்கு அடிமையாக்கிவிட்டு பின்னர் போதை பொருளை கொடுக்க வேண்டுமெனில் தங்களுடைய பாலியல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மிரட்டப்படுவுதாகவும் டயஸ் கூறுகிறார். இந்த போதை பொருட்கள் சைக்கோ-ஆக்டிவ் மருந்துகளாகும். எனவே இதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மூளையில் வேதியல் மாற்றம் ஏற்படலாம். இது பிற்காலங்களில் போலியான மாய தோற்றங்களை உருவாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications