கொரோனா மைய குளியலறையில் ரகசிய கேமரா .. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கைது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா முகாமில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை குளிக்கும் போது செல்போன் வைத்து அதை வீடியோவாக எடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள்ளும் இருந்த நிலையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலையில் ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

20 வயது இளம்பெண்

20 வயது இளம்பெண்

இந்த மையத்தில் கேரளா மாநிலம் செங்கல் பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி ஷாலு (25) என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த மையத்தில் 20 வயது இளம்பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குளிக்கும் காட்சிகள்

குளிக்கும் காட்சிகள்

அந்த பெண் அந்த மையத்தில் இருந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் செல்போனை எடுத்து பார்த்த போது அந்த பெண் குளிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

இதைத் தொடர்ந்து செல்போனை எடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து செல்போனை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த போன் ஷாலுவினுடையது என தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததை ஒப்புக் கொண்டார்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

இதையடுத்து அவர் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 108 ஆம்புலன்ஸில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி சம்பவம் முடிந்த சில நாட்களுக்குள் இது போன்று மற்றொரு பாலியல் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+