Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் வரிசையில் பினராயி விஜயனின் மகள்! வீணா விஜயன் மீது ED வழக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

கேரளாவின் கொச்சியில் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவத்தின் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டு நடத்தியிருந்தது. ரெய்டில் கிடைத்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

Enforcement Directorate registered a case against Pinarayi Vijayan s daughter Veena Vijayan under the PMLA

அதாவது, வீணா விஜயன் 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' எனும் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் ரூ.1.72 கோடி கொடுத்ததாக அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களில் தெரிய வந்திருக்கிறது.

2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் வீணா விஜயனின் நிறுவனத்திற்கு, கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் இந்த பணத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், இதற்காக வீணா விஜயனின் நிறுவனம் எந்த சேவையையும், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கவில்லை. அப்படியெனில் ஏன் இந்த பணம் கொடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் கொள்ளையில் ஈடுபட முயன்றதாகவும், இதற்கான அனுமதி கேட்டே முதல்வரின் மகள் வீணா விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

ஏற்கெனவே, தங்கள் நிறுவனம் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் வீணா விஜயன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் வீணா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் உட்பட, 3 டெல்லி அமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே வேட்பாளர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன், தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது ஆகியவை மத்திய விசாரணை அமைப்புகள் மீதான நம்பகத் தன்மை மீது கேள்வி எழுப்பியுள்ளன என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் கரங்கள் கேரளாவிலும் நீண்டிருப்பது, மத்திய விசாரணை அமைப்புகள் மீதான விமர்சனங்களை கூர்மைப்படுத்தியுள்ளது. முன்னதாக தங்க கடத்தல் வழக்கில் பிரனாயி விஜயன் மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது. ஆனால், இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் அமலாக்கத்துறை பெரிய அளவில் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+