Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோளில் "கை" போட்டு சீண்டல்.. பிரபல நடிகர் பண்ற வேலையா இது? இவர் ஒரு பாஜக பிரபலம் வேற.. அதிர்ந்த பெண்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாஜக பிரமுகரும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபி மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இது தொடர்பான செய்திதான் கேரளாவை வட்டமடித்து கொண்டிருக்கிறது.

தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாஜக பல வருடங்களாகவே முயன்று கொண்டிருக்கிறது.. அந்தவகையில், கேரளாவில் விரித்த வலையில் விழுந்தவர் பிரபல நடிகர் சுரேஷ் கோபி.

Famous Actor Suresh Gopi and Who is this Kerala women journalist, complaint against BJP Suresh Gopi

காவி நிறம்: நாயர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நாயர் ஓட்டுக்கள் மொத்தமும் தங்கள் பக்கம் திரும்பும் என்று பாஜக கணக்கு போட்டது.. இதை மனதில் வைத்தே, கடந்த 2016-ல், சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா சீட் தந்தது.. ஆனால், "சிவப்பு" மண்ணான கம்யூனிஸ்ட் கேரளாவில் "காவி"யின் நிறம் அவ்வளவாக எடுபடவில்லை. அதிலும், காங்கிரஸ் கட்சிகளை மீறி சுரேஷ்கோபியால், மெஜாரிட்டி வாக்குகளை எடுக்க முடியவில்லை.

கடந்த எம்பி தேர்தலிலும், திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபிக்கு சீட் தந்தது பாஜக.. ஆனால், 3வது இடத்தையே பிடித்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திருச்சூரில் போட்டியிட்டபோது, அப்போதும் 3வது இடத்தையே பிடித்தார்..

எதிர்பார்ப்பு: கடந்த ஏப்ரல் மாதம் சுரேஷ் கோபியின் ராஜ்ய சபா எம்பி பதவிக்காலம் முடிவுக்கு வந்தநிலையில், சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், தரவில்லை. மாநில பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று ஒரு பேச்சுக்கூட வட்டமடித்தது. அப்படியும் எதுவும் நடக்கவில்லை. இதனால், மேலிட பாஜகவிடம், லேசான வருத்தத்தில் இவர் உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

சர்ச்சைகள்: இதெல்லாம் அரசியல் ரீதியான விவகாரங்கள் என்றாலும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர் சுரேஷ் கோபி.. திருச்சூர் வடக்குநாதன் கோயில் பூசாரியிடம், ரூ.1000 கொடுத்து, சர்ச்சையில் சிக்கியவர்-

ஒருமுறை விஷூ பண்டிகையின்போது, காருக்குள் உட்கார்ந்துகொண்டு, பொதுமக்களுக்கு சுரேஷ் கோபி பணம் கொடுப்பதும், அவரிடம் வரிசையில் நின்று பெண்கள், பணம் வாங்கிக்கொண்டு, அவரது காலை தொட்டு கும்பிடுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது. இதோ இப்போதுகூட ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

செய்தியாளர்கள்: கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் சுரேஷ் கோபி.. அப்போது, சுரேஷ் கோபி பக்கத்திலேயே ஒரு பெண் செய்தியாளர் நின்று கொண்டிருந்தார்.. அனைத்து செய்தியாளர்களும் கேள்வி கேட்டதைபோலவே, அந்த பெண்ணும் சுரேஷ் கோபியிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் சொல்லும்போது, திடீரென அந்த பெண்ணின் தோளின் மீது கை வைத்து கொண்டே பேசியிருக்கிறார் சுரேஷ் கோபி.. இதை அந்த பெண் செய்தியாளர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சி அடைந்த அவர், சுரேஷ் கோபியின் கையை 2 முறை தட்டிவிட்டார்.. ஆனால் அப்போதும்கூட, மறுபடியும் அந்த பெண்ணை தன்னருகே இழுத்து கை வைத்து, மறுபடியும் சீண்டலில் சுரேஷ் கோபி ஈடுபட்டுள்ளார்.

Famous Actor Suresh Gopi and Who is this Kerala women journalist, complaint against BJP Suresh Gopi

லைவ் வீடியோ: இதெல்லாம் மீடியாவிலும் லைவ் வீடியோவாக வெளியானது.. பிறகு, சுரேஷ் கோபியின் இந்த நடவடிக்கை குறித்து கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் போலீசுக்கு சென்று புகார் தந்தது. அந்த புகாரின் பேரில், போலீசாரும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பின்னர் இதுகுறித்து, செய்தியாளர்களிடம் சுரேஷ் கோபி சொல்லும்போது, "அந்த பெண் செய்தியாளர், என் வழியை பலமுறை மறைத்தார்... அதன் காரணமாகவே அவரை நான் அவரை லேசாக நகர்த்த முயன்றேன். நான் ஒரு அப்பாவை போல, அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்.. இந்த சம்பவத்திற்கு பிறகு அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்க தொடர்பு கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் கேரளாவில் அடங்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+