ஆபாச காட்சிகளில் நடிப்பு.. நடிகை ஸ்வேதா மேனன் மீது பாய்ந்த வழக்கு.. தமிழிலும் நடித்து இருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்; பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். அவர் பணத்துக்காக திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் ஆபாச காட்சிகளில் நடித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஸ்வேதா மேனன் தமிழிலும் பட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஸ்வேதா மேனன். இவர் மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிநேகிதி என்ற திரைப்படத்தில் ஜெயஸ்ரீ என்ற பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். இதுதவிர ‛சந்தித்த வேளை', நான் அவன் இல்லை - 2, அரவாண், துணை முதல்வர், இணையதளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

fir-filed-against-malayalam-actor-shwetha-menon-for-allegedly-acting-obscene-and-vulgar-content-in-f

இவர் கேரளாவில் சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். ஸ்வேதா மேனனுக்கு தற்போது 51 வயது ஆகிறது. இந்நிலையில் தான் ஆபாச காட்சிகளில் நடித்ததாக எழுந்த புகாரில் ஸ்வேதா மேனன் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் சென்ட்ரல் போலீசில் ஸ்வேதா மேனன் மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனசேரி வழங்கினார். அதில் ‛‛ஸ்வேதா மேனனின் திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் ஆபாச காட்சிகள் உள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஸ்வேதா மேனன் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆபாச காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கிடக்கிறது. இது இளம் வயதினரை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இந்த புகாரை தொடர்ந்து நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்வேதா மேனன் கேரளா உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் உள்ளார். மலையாள திரைப்பட கலைஞர் சங்கத்தின் (Association of Malayalam Movie Artistes or AMMA)தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில் தவறான நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்வேதா மேனன் கேரளாவின் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது ஸ்வேதா மேனனுக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. இதனால் ‛அம்மா' கமிட்டியின் முதல் பெண் தலைவராக அவர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த ‛அம்மா' கமிட்டி நடிகர் மோகன் லால் தலைமையில் செயல்பட்டு வுந்தது. நடிகைகளுக்கு, நடிகர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பூதாகரமான நிலையில் நடிகர் மோகன் லால் மற்றும் கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர்கள் பணியை ராஜினாமா செய்திருந்த நிலையில் ஸ்வேதா மேனன் தலைவர் பதவியை குறிவைத்து களமிறங்கி உள்ளார். தற்போது அவர் ஆபாசமான காட்சிகளில் நடிப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது ஸ்வேதா மேனனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+