ரூ.10 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆட்டோ டிரைவர்.. கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு
திருவனந்தபுரம்: கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் முதல் பரிசுத்தொகை ரூ.10 கோடி ஆகும். இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் ஆகும். முதல் பரிசு கண்ணூரை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு கிடைத்துள்ளது.
கேரளாவில் மாநில அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. கேரள அரசிற்கு லாட்டரி விற்பனை மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான பரிசுத்தொகையுடன் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. அதுபோக பம்பர் லாட்டரி சீட்டுக்களும் சீசனுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகின்றன.

சம்மர் பம்பர் லாட்டரி: அதாவது, கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், ஓணம் பம்பர், மழைக்கால பம்பர் உள்ளிட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்றது. முதல் பரிசு ரூ.10 கோடி கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். இந்த லாட்டரி டிக்கெட்டின் விற்பனை சக்கை போடு போட்டது. 36 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் 33.6 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
கேரள மாநில எல்லையோர மாவடங்களில் உள்ள தமிழர்களும் விரும்பி சென்று லாட்டரி சீட்டுக்களை வாங்கி வந்தனர். கடந்த கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு புதுவையை சேர்ந்தவருக்கு கிடைத்து இருந்தது. இதனால், சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசுத்தொகை அடிக்க அதிர்ஷ்டசாலி யார் என்பதை சேட்டன்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது.
ஓவர் நைட்டில் 10 கோடிக்கு அதிபதி: முதல் பரிசு SC308797 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது. கன்னூர் மாவட்டத்தில் உள்ள கர்திகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான நாசீர் என்பவர்தான் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி என்பது தெரியவந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமைதான் இந்த லாட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார். அதாவது குலுக்கல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் நசீர் டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
நமக்கெல்லாம் எங்கே லாட்டரியில் பரிசு அடிக்கும் என்ற எண்ணத்துடன் இருந்தவர் முதல் பரிசுக்கான டிக்கெட் எண் அறிவித்ததும் ஒரு நிமிடம் தலையே சுற்றி போய்விட்டதாம். சாதாரண ஆட்டோ டிரைவரான நாசர் ஓவர் நைட்டில் 10 கோடிக்கு அதிபதியாகியுள்ளார். 50 லட்சம் கொண்ட இரண்டாவது பரிசுத்தொகை SA 177547 - என்ற டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது.
தமிழகத்தில் விற்பனைக்கு தடை: இந்தியாவில் கேரளா மட்டும் இன்றி அசாம், சிக்கிம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாட்டரிக்கு அனுமதி உள்ளது. தமிழகத்திலும் இந்த லாட்டரிக்கு 2003-ஆண்டு வரை அனுமதி இருந்தது. எனினும், ஒரு சிலர் பணக்காரர் ஆவதற்காக பல ஆயிரம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் சூழல் இருப்பதாகவும், அடித்தட்டு மக்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திப்பதால் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு 2003- ஆம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தது. இதன்படி, தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். கேரள லாட்டரி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் வாங்கியது தெரியவந்தால், கேரள மாநில அரசு பரிசுத்தொகையை கொடுக்காமல் மறுக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
-
Kerala lottery: கேரள லாட்டரியில் 30 லட்சம் பரிசு.. மறந்துபோன உரிமையாளர்! கேரள வியாபாரி செய்த காரியம்! என்ன மனுஷன்யா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications