கடைசி போஸ்ட்.. ரூமுக்குள் சென்று கதவை பூட்டி கொண்ட பெண்.. மகளின் செய்தியால் பகீர்.. கேரள பரபரப்பு

கேரள முன்னாள் அழகியின் இன்ஸ்டாகிராம் கடைசி வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மகள் சாலை விபத்தில் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்டதும், அவரது தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர்... இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.. இவர்கள் 2 பேருமே நெருங்கிய தோழிகள்.. ஆன்சி திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.. அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர்..

இந்நிலையில், நேற்று அதிகாலை தோழிகள் 2 பேர் உட்பட 4 பேர் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களின் முன்னாடி ஒரு பைக் சென்று கொண்டிருந்தது.

விபத்து

விபத்து

அந்த பைக் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக, காரை சட்டென்று திருப்பவும், கார் கட்டுப்பாட்டை இழந்தது.. தாறுமாறாக ரோட்டில் ஓடி, சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதியது... இதில் கார் அடியோடு நொறுங்கி அதில் இருந்த அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் இருவருமே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர்... அங்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.

பதிவு

பதிவு

விபத்தில் இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு ஆன்சி பதிவிட்ட ஒரு இன்ஸ்டராகிராம் போஸ்ட் பொதுமக்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.. அந்த வீடியோவில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் ஆன்சி நடந்து செல்வது போல இருக்கிறது.. ''இது போவதற்கான நேரம்'' (It's time to go )" என்றும் பதிவிட்டிருந்தார்.. பல தரப்பினரையும் இந்த விபத்து அதிர்ச்சியை உண்டு பண்ணிய நிலையில், தங்கள் அஞ்சலியை சோஷியல்மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

கதறி அழுகை

கதறி அழுகை

இந்நிலையில், அன்சி கபீர் விபத்தில் பலியானது பற்றி அவரது அம்மா ரசீனாவுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.. அதைக்கேட்டதுமே ரசீனா கதறி அழுது, அவரது ரூமுக்குள் ஓடிச் சென்று கதவையும் உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.. அவரது அவர் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.. நீண்ட நேரமாகியும் அவரது ரூம் கதவு திறக்கப்படவில்லை... அதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது பற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரசீனா வாயில் நுரைதள்ளியபடி மயங்கி விழுந்து கிடந்தார்... மகள் இறந்தது கேள்விப்பட்டதுமே அவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது... இதையடுத்து போலீசார் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்... அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+