கேரளாவில் அடுத்த முதல்வர் யார்? கேசி வேணுகோபால் டூ ரமேஷ் சென்னிதாலா வரை.. காங்கிரஸின் டாப் 3 லிஸ்ட்
திருவனந்தபுரம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பட்டியலில் கேசி வேணுகோபால், ரமேஷ் சென்னிதாலா, சதீசன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் யார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் 2016, 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்று 10 ஆண்டுகள் ஆண்டது. முதல்வராக பினராயி விஜயன் செயல்பட்டார். இந்நிலையில் தான் கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் மெஜாரிட்டிக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்), எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி என்று 3 முனை போட்டி நிலவியது.
காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி
இதில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஐஎன்டி கட்சி, ஆர்எஸ்பி (Revolutinary Socialist Party) கட்சிகள் தலா 3 தொகுதிகளிலம், சிஎம்பி, கேடிபி, கேசி (ஜே), ஆர்எம்பிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கிறது.
மா. கம்யூ வீழ்ச்சி - பாஜக எழுச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 தொகுதிகளிலும், ஆர்ஜேடி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முறை 3 தொகுதிகளில் வாகை சூடி எழுச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் கேரளாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதுபற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ரமேஷ் சென்னிதாலா
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரமேஷ் சென்னிதாலா. காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர். 2016ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றபோது சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டுள்ளார். இவர் தற்போது ஹரிபாத் தொகுதியில் 23,377 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டிடி ஜிஸ்மனை வீழ்த்தி உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கேசி வேணுகோபால்
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் கேசி வேணுகோபால். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவிற்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொது செயலாளராக செயல்பட்டு வருகிறார். கேரளாவின் ஆழப்புழா தொகுதியின் எம்பியாக இருக்கிறார். இவருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விடி சதீசன்
இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர் விடி சதீசன். இவர் தற்பாது பரவூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது கேரளா சட்டசபையில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால் கேரளாவில் காங்கிரஸ் சார்பில் அடுத்த முதல்வராக கேசி வேணுகோபால், விடி சதீசன், ரமேஷ் சென்னிதாலா ஆகியோரில் ஒருவர் வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி கேரளா அரசியலில் கேசி வேணுகோபால், விடி சதீசனை விட அதிக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications