தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் நிறுத்தம்.. 20 ஆயிரம் கோடி ரயில்வே பணி முடங்கும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை நம்பி இருந்த கேரள ஒப்பந்ததாரர்கள், தற்போது, மணல், செங்கல், ஜல்லி உள்பட பல்வேறு கனிம வளங்கள் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றன. கேரளாவில் நடந்து வரும் ரூ.20 ஆயிரம் கோடி ரயில்வே மேம்பாட்டு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில்புதிதாக குவாரிகளை திறக்க முதல்வர் வி டி சதீசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேராளவிற்கு கனிம வளங்கள் என்பது பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து தான் போக வேண்டியதிருக்கிறது. ஏனெனில் கேரளாவில் நிலச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் பல இடங்களில் குவாரிகள் செயல்பட அனுமதி இல்லை.. முன்னதாக கேரளம் மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டில் இருந்தன. ஆனால் 2023-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கேரளத்தில் செயல்பட்டு வந்த பெரும்பான்மையான குவாரிகள் மூடப்பட்டுவிட்டன, தற்போது கேரளத்தில் 219 குவாரிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

Kerala Tamil Nadu

இதனால் கனிம வளங்களுக்கு தமிழகத்தை தான் கேரளம் அரசு நாடி வந்தது. அதன்படியே கேரளத்தில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள், ரெயில்வே மேம்பாட்டு கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து கல், மண் உள்பட கனிம வளங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல இடங்களில் குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல்
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை வளம் பாதிக்கும் வகையில் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தன. ஆனாலும் எதிர்ப்பை மீறி கேரளாவுக்கு கனிமவளம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில புதிதாக தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு கல், மண் உள்பட கனிம வளங்களை கேரளம் உள்பட அண்டை மாநிலங்களுக்கு 3 மாதங்களுக்கு அனுப்ப தடை விதித்திருக்கிறது. இதனால் கேரளத்தில் சுமார் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே விரிவாக்க பணிகள் முடங்கும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இது கேரளத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சனையில் விரைவாக தீர்வு காணவும், கேரளத்தில் கூடுதல் குவாரிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் முதல்வர் விடி சதீஷனை நாடியுள்ளனர்.

முன்னதாக தமிழக அரசு தடை விதித்ததுமே, கேரள முதல்வர் வி.டி.சதீசன், முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் நெடுஞ்சாலைப் பணிகளை கடுமையாக பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும்தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது தென்னிந்தியா முழுமைக்கும் நன்மை பயக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக முதல்வர் விஜய் இதற்கு பதில் அளித்தததாக எந்த தகவலும் இல்லை.. தற்போதைய நிலையில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+