ஐயப்பன் பாடல்களை பாடும் வீரமணி ராஜூவுக்கு 2021ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது - கேரளா அறிவிப்பு
வீரமணி ராஜூவுக்கு கேரள அரசின் உயரிய விருதாக கருதப்படும் ஹரிவராசனம் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் பக்தி பாடகர் வீரமணி ராஜூவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்படுவதாக கேரளா அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுடன் ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அளிக்கப்படும்.
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சன்னிதானத்தில் வைத்து விருது வழங்கி வருகிறது.

ஐயப்ப பாடல்கள் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் பாடகர் வீரமணி ராஜூ. இவர் தமிழ் , மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை பாடியுள்ளார். கார்த்திகை மாதங்களில் இவர் பாடிய பாடல்கள் கோவில்கள் தோறும் ஐயப்ப பக்தர்களால் பஜனைகளில் பாடப்படும்.
மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் ஏற்பட அரும்பாடு பட்டுள்ள வீரமணி ராஜூவின் பங்களிப்பை பாராட்டி 2021 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்படுவதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுடன் ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அளிக்கப்படும்.
ஐயப்ப கோவிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையின்போது சன்னிதானத்தில் வைத்து ஹரிவராசனம் விருது வீரமணி ராஜூக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்த விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications