திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதல் மங்கி பாக்ஸ் மரணம்? பீதியை கிளப்பும் "சிவப்பு கொப்புளங்கள்"! கேரளாவில் பரபரப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மங்கி பாக்ஸ் குறித்து அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Monkey pox அச்சுறுத்தல்! மக்கள் என்ன செய்யணும்? *Health

    உலகெங்கும் இப்போது மங்கி பாக்ஸ் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவி உள்ளது.

    வரும் காலத்தில் மங்கி பாக்ஸ் பாதிப்பில் நாட்டில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது எங்கு அடுத்த ஊரடங்கிற்கு வழிவகுக்குமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

    அதிமுகவில் சாதி மோதலா? நீங்க ஓபிஎஸ் பக்கமா? ஈபிஎஸ் பக்கமா? - சசிகலா சொன்ன பதில் - அங்கதான் ட்விஸ்ட் அதிமுகவில் சாதி மோதலா? நீங்க ஓபிஎஸ் பக்கமா? ஈபிஎஸ் பக்கமா? - சசிகலா சொன்ன பதில் - அங்கதான் ட்விஸ்ட்

    மங்கி பாக்ஸ்

    மங்கி பாக்ஸ்

    இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் முதலில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் முதலில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதியானது. இருப்பினும், சில நாட்களிலேயே அவர் பூரணமாகக் குணமடைந்தார். கேரளாவில் இதுவரை மூன்று பேருக்கு டெல்லியில் ஒருவருக்கு என இதுவரை மொத்தம் நான்கு பேருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    கேரளாவில் முதல் உயிரிழப்பு?

    கேரளாவில் முதல் உயிரிழப்பு?

    இந்தச் சூழலில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நபர் சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பி இருந்தார். அவருக்கு மங்கி பாக்ஸ் ஒத்த அறிகுறிகள் இருந்ததால் அவர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்குத் தேவையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்து உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆய்வு

    ஆய்வு

    இதையடுத்து உயிரிழந்த நபரின் மாதிரிகளை ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு மங்கி பாக்ஸ் உறுதியானால், குரங்கு அம்மையால் நாட்டில் பதிவாகும் முதல் உயிரிழப்பாக இது இருக்கும். உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உடலைத் தகனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    இது தொடர்பாக நோயாளிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில்,"அந்த நபருக்கு மங்கி பாகஸ் ஒத்த பாதிப்பு இருந்தது. அவர் அட்மிட் ஆகும்போது, அவருக்குச் சிவப்பு கொப்புளங்கள் எதுவும் இல்லை. ஆனால் சில நாட்களில் அந்த அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. அவர் அதிக ஆபத்தான நாடாகப் பட்டியலிடப்பட்ட ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பியதால், அவரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தான் வைத்திருந்தோம். எனவே, மற்றவர்களுக்குப் பாதிப்பு பரவாது" என்றார்.

    உறுதியாக தெரியாது

    உறுதியாக தெரியாது

    அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பியதாகவும் முதலில் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் உடலில் சிவப்பு கொப்புளங்கள் தோன்றியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதேநேரம் இப்போதே நாம் எந்தவொரு முன்முடிவுக்கும் வரத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டெஸ்ட் முடிவுகள் வந்த பின்னரே, இது மங்கி பாக்ஸ் உயிரிழப்பா என்பது உறுதியாகத் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மங்கி பாக்ஸ்

    மங்கி பாக்ஸ்

    மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், நிணநீர் சுரப்பிகள், கொப்புளங்கள் போன்றவை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள போதிலும், 10க்கும் குறைவான நபர்களே இதனால் உயிரிழந்து உள்ளனர்.

    English summary
    Kerela suspected monkeypox patient died in Kerala’s Thrissur: (கேரளாவில் மங்கிபாக்ஸ் காரணமாக ஒருவர் உயிரிழப்பு) Kerala registers first monkeypox death in india.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X