Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜூஸ்".. செக்கப் வேற.. மொத்தமா கதை முடித்த க்ரீஷ்மா.. "அதை" பார்த்ததுமே.. குலுங்கி குலுங்கி அழுதாராமே

காதலனுக்கு விஷம் வைத்து கொன்ற பெண் போலீசில் சாட்சியம் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இத்தனை நாளும் சிகிச்சையில் இருந்த க்ரீஷ்மாவை, அவரது வீட்டிற்கு போலீசார், சாட்சியம் அளிப்பதற்காக அழைத்து வந்தனர்.. அப்போது க்ரீஷ்மாவை பார்ப்பதற்காக அந்த ஊர் மக்களே திரண்டுவந்துவிட்டார்களாம்.. ஆனால், க்‌ரீஷ்மா யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை.. தலையை கூட நிமிர்த்தி பார்க்காமல், வீட்டுக்குள் வேகவேகமாக போலீசாருடன் சென்றாராம்.

22 வயது பெண்ணின் குரூரத்தையும், கொடூரத்தையும் நினைத்து, பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. காதலனை விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், சம்பவத்தின் உண்மைத்தன்மை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை.

ஷாரோனுக்கு ஜுஸில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதையடுத்து, குற்றவாளியான கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்...

 ஜாலி டூர்

ஜாலி டூர்

அந்த விசாரணையின்போது ஜூஸிலும், கஷாயத்திலும், விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டார்... அதற்கு பிறகுதான் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விசாரிக்க முடிவானது.. அன்று க்ரீஷ்மா கைது செய்யப்பட்ட உடனேயே கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல காவல்துறை திட்டமிட்டார்கள்.. ஆனால், அவர் திடீரென தற்கொலைக்கு முயலவே அந்த விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பிறகு, கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

 நிமிராத தலை

நிமிராத தலை

இதனிடையே, கிரீஷ்மாவின் வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டிருந்தது... இப்படிப்பட்ட சூழலில்தான், கிரீஷ்மாவை, கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது வீட்டின் சீல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... இருந்தாலும், கிரீஷ்மாவை அவரது வீட்டில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கிரீஷ்மாவின் வக்கீலும், சாட்சியமளிக்கும் இடத்திற்கு வந்திருந்தார்.. அப்போது, ஷாரோனுக்கு எப்படி விஷம் கலந்து தந்தார் என்பதையெல்லாம் க்ரீஷ்மா போலீசாரிடம் நடித்துக்காட்டியுள்ளார். இதை போலீசாரும் வீடியோவாக பதிவு செய்துக்கொண்டனர்..

 ஜூஸ் பாட்டில்

ஜூஸ் பாட்டில்

தொடர்ந்து நடந்த விசாரணையில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன... அதாவது, ஷாரோனை கொலை செய்வதற்கு, கிரீஷ்மா 3 மாதங்களுக்கு முன்பே ஒரு பிளானை போட்டாராம்.. இதற்காக பல இடங்களுக்கு ஷாரோனை ஜாலி டூர் அழைத்து சென்றுள்ளார்.. அப்போது, "ஜூஸ் சேலஞ்ச்" என்ற பெயரில் ஜூஸில் விஷத்தை கலந்து தந்துள்ளார்.. அதாவது, 2 ஜூஸ் பாட்டில்களை வாங்கி, ஒன்றை தான் எடுத்துக் கொண்டு, இன்னொன்றை ஷாரோனுக்கு தந்து குடிக்க சொல்லி உள்ளார்..

 ஜூஸ் போட்டி

ஜூஸ் போட்டி

யார் முதலில் குடிப்பது என்பதுதான் போட்டியாம்.. இந்த போட்டியில் 2 பேருமே ஜூஸ் குடித்தனர்.. ஆனால், ஷாரோன் குடிக்கும் ஜூஸ் பாட்டில்களில் மட்டும் விஷம் கலந்து தந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஷாரோனுக்கு பலமுறை உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.. கடந்த 3 மாதமாகவே அடிக்கடி வாந்தி எடுத்து வந்துள்ளார்.. பல தொந்தரவுகளுக்கும் ஆளாகி உள்ளார்.. அதனால்தான் இந்த முறை விஷத்தை சற்று ஸ்டிராங் ஆக கலந்தாராம் க்ரீஷ்மா.

 குலுங்கி குலுங்கி..

குலுங்கி குலுங்கி..

வீட்டின் சீல் மற்றும் பூட்டை உடைத்து யாரோ உள்ளே நுழைந்துவிட்டதாகவும், சாட்சியங்களை அழித்துவிட்டார்களோ என்றும் சந்தேகம் வலுத்த நிலையில், வீட்டில் இருந்து அப்படி எந்த பொருளுமே காணாமல் போகவில்லை என்கிறார்கள்.. அதேசமயம், இப்படி ஒரு பயங்கரமான கொலை வழக்கு நடந்துள்ள நிலையில், அதிலும் ஒரு சர்ச்சைக்குரிய வழக்காக மாறி உள்ள நிலையில், அந்த வீட்டிற்கு ஒரு போலீஸ்காரரை கூட பாதுகாப்புக்காக முன்கூட்டியே நியமிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்..

 ஷெல்ஃப்

ஷெல்ஃப்

கைது செய்யப்பட்ட பிறகு கிரீஷ்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து சாட்சியமளிப்பது இதுவே முதல் முறை என்பதால், அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் க்ரீஷ்மா வீட்டின் முன்பு திரண்டு விட்டார்களாம்.. க்ரீஷ்மா வீட்டுக்கு வரப்போகிற தகவல் தெரிந்ததும், ஊர்மக்களும், செய்தியாளர்களும் அங்கு குழுமிவிட்டனர்.. ஆனால், க்ரீஷ்மா யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல், தலையை கீழே குனிந்தவாறு வீட்டிற்குள் சென்றுள்ளார்.. வீட்டிற்குள் நுழைந்ததுமே, அங்கு க்ரீஷ்மா வாங்கிய ஏராளமான விருதுகள் மற்றும் கோப்பைகள் ஷெல்ப்பில் இருந்துள்ளது.. அதை பார்த்து கிரீஷ்மா கண்ணீர் விட்டு அழுதாராம்.. என்ன விருதுகளை வாங்கியும் என்ன பிரயோஜனம்? புத்தி சரியில்லையே..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+