“நிர்வாணமாக்கப்பட்டு.. பாலியல் தொல்லை!” கேரள திரைப்பட தயாரிப்பாளர் மீது நடிகர் புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள திரையுலகில், வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று, நீதிபதி ஹேமா கமிட்டி கூறியிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பிரபல சினிமா தயாரிப்பாளர் ரஞ்சித் மீது நடிகர் ஒருவர், பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.

மலையாள சினிமாக்கள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இந்த சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது.

hema committee malayalam cinema kerala

ஆனால், இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்த, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது.

இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.

இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து சித்திக், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். மற்றொரு நடிகரான ரியாஸ் கான் மீதும் ரேவதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ரேவதியை தொடர்ந்து, பெங்காலி நடிகை ஒருவர், கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ரஞ்சித் மீது ஆண் நடிகர் ஒருவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அதாவது ரஞ்சித் குடிபோதையில் தன்னை நிர்வாணமாக்கி, அதை புகைப்படம் எடுத்து சக நடிகைகளுக்கு பகிர்ந்திருக்கிறார் என்று நடிகர் ஒருவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இது குறித்து, அந்த நடிகர் கேரள டிஜிபியிடம் அளித்திருந்த புகாரில், "இந்த சம்பவம் கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. சம்பவம் நடந்தபோது ரஞ்சித் போதையில் இருந்தார். என்னை கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்தினார். ஆடிஷனுக்காகதான் அவர் இப்படி செய்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நிர்வாணமாக என்னை போட்டோ எடுத்து, அதை நடிகை ஒருவருக்கு அனுப்பி வைத்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+