ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல.. குரானில் 7 முறை மட்டுமே இடம்பெற்ற ஹிஜாப்!.. கேரளா ஆளுநர்!
திருவனந்தபுரம்: ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் (பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் இருக்கும்) ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்துத்துவா மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். சிலர் கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர்.

ஹிஜாப் போராட்டம் தீவிரம்
இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 16 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா ஹைகோர்ட்டில் இஸ்லாமிய மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் ஹிஜாப் அல்லது காவி துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

ஹிஜாப் குறித்து தீர்ப்பு
இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் நிலவி வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல.

குரானில் இடம்பெற்ற ஹிஜாப்
ஹிஜாப் என்ற வார்த்தை 7 முறை மட்டுமே குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் உடை ரீதியிலான கோணத்தில் கூறப்படவில்லை. இஸ்லாமிய மத பெண்கள் கல்வி என்பதை கடினமாக்கவே ஹிஜாப் விவகாரத்தை சர்ச்சையாக சதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம்
நீங்கள் எந்த உடையை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேரும் போது அங்குள்ள விதிமுறைகள் மற்றும் உடை விதிகளை பின்பற்ற வேண்டும். ஒரு வேளை நீங்கள் அந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது.
Recommended Video

வகுப்பறை
மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் சீக்கியர்கள் டர்பன் அணிய அனுமதிப்பதையும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிப்பதையும் ஒப்பிட்டு விவாதிப்பது மிகவும் அபத்தமானது. டர்பன் சீக்கிய மதத்தின் முக்கிய அங்கம் ஆகும். ஆனால் ஹிஜாப் என்பது பெண்களின் உடை என குரானில் குறிப்பிடப்படவில்லை என்றார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications