திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன ஹோட்டலில் சாப்பிட்டார்.. கேரளா வந்தார்.. இப்போது வைரஸ்.. இந்தியாவிற்கு கொரோனா வந்தது எப்படி?

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் இந்தியருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது |

    திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு எப்படி கொரோனா வைரஸ் பரவியது, அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

    சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை. கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.

    கேரளாவில் 4 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 4 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்தியாவில் முதல் நபர்.. கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.. பரபரப்பு! இந்தியாவில் முதல் நபர்.. கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.. பரபரப்பு!

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் இந்த கேரள இளைஞருக்கு எப்படி கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது என்று விவரம் வெளியாகி உள்ளது. இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழத்தில் படித்து வந்தார். கேரளாவில் இருந்து கடந்த வருடம் அங்கே சென்று இவர் படிப்பை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அங்கிருந்து மக்கள் எல்லோரும் வெளியேற்றபட்டுள்ளனர். முக்கியமாக வெளிநாட்டு மக்களும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    கேரளா

    கேரளா

    இந்த நிலையில்தான் கேரளாவை சேர்ந்த அந்த மாணவரும் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்படும் முதல் வாரம்தான், வுஹன் நகரத்தில் உணவு உட்கொண்டு இருக்கிறார். தனியார் ஹோட்டல் ஒன்றில் சீன பாரம்பரிய உணவை உட்கொண்டுள்ளார். இதன் பின் கேரளா வந்தவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இவர் கேரளா வந்த போதே, கொச்சி விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு தெர்மல் சோதனையில் இவருக்கு கிருமி தாக்குதல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    கிருமி

    கிருமி

    இவருடன் வந்த இன்னும் 9 பேருக்கு கிருமி தாக்குதல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இவர்கள் எல்லோரும் ஒன்றாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது சோதிக்கப்பட்டனர். அதில் 5 பேருக்கு நோய் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. பின் 4 பேருக்கு தொடர் சோதனை செய்யப்பட்டது. அதில் இப்போது இந்த மாணவருக்கு மட்டும் கொரோனா தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.

    சீனா அறை

    சீனா அறை

    சீனாவின் இவரின் அறையில் இருந்தவர்களுக்கும் கொரோனா இருந்துள்ளது. அவர்களிடம் இருந்து இந்த தாக்குதல் இவர்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவருக்கு உடல் முழுக்க கவர் செய்யப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவரை பார்க்க உறவினர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    English summary
    How did Kerala Student get Coronavirus in China: Here are the details you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X