தாலியின் வாசம்கூட போகல.. ஆற்றங்கரைக்கு வந்த ஜோடி.. எதிர்பார்க்கவே இல்லை.. கதறி கதறி அழுத இளம்பெண்
போட்டோ ஷூட் எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார் மாப்பிள்ளை
திருவனந்தபுரம்: திருமணமாகி வெறும் 20 நாளில் இப்படி ஒரு ஷாக் சம்பவம் நடக்கும் என்று இளம்பெண் அறிந்திருக்க மாட்டார். கோழிக்கோடு பகுதியே உறைந்து போயுள்ளது இந்த அதிர்ச்சி சம்பவத்தினால்..!
முன்பெல்லாம், திருமணத்துக்காக பெண்ணை பார்த்துவிட்டு போய்விட்டால், மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணின் போட்டோ உட்பட போன் நம்பர் கூட தருவதை தவிர்ப்பார்கள்.
அதற்கு முன்பும், பெண்ணையோ, மாப்பிள்ளையோ ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுக்ககூட தயக்கம் காட்டுவார்கள்..

திருமணம்
ஆனால், சமீபகாலமாகவே, திருமணத்துக்கு முன்பே போட்டோ ஷூட் நடத்தும் வியாதி இளைஞர்களை பிடித்து கொண்டுவிட்டது.. இப்படி ஒரு முறையை பிரபலப்படுத்தியதே கேரள மாநிலமாகத்தான் இருக்கும்.. 2 வருடத்துக்கு முன்பு, திருமண ஜோடி, டீ எஸ்டேட்டில் போட்டோ ஷூட் நடத்தியது.. அந்த தோட்டத்தில் வெறும் வெள்ளை துணியை போர்வையாக போர்த்தி கொண்டு, சிரித்தபடியே ஓடித்திரிந்தார் மணப்பெண்.. அவரை துரத்திக் கொண்டே பிடிக்க மாப்பிள்ளை.. அந்த பெண்ணுக்கு உடம்பில் டிரஸ்ஸே இல்லை..

டிரஸ்ஸே இல்லை
இதற்கு பிறகு பல்வேறு இளைஞர்களும் போட்டோ ஷூட் எடுப்பதில் ஆர்வம் காட்டியபடி வருகிறார்கள்.. இதே கேரளாவில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், இது திருமணத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஆகும்.. இந்த போட்டோஷூட்டில்தான் அந்த அதிர்ச்சி நடந்துள்ளது.. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே குற்றியாடி, கடியங்காட்டை சேர்ந்தவர் ரெஜின்லால்.. 28 வயதாகிறது..

போட்டோகிராபர்கள்
ரெஜின்லாலுக்கும், அதே பகுதியை சேர்ந்த கணிகா என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந் தேதி திருமணம் தடபுடலாக நடந்தது... திருமணத்தன்று, அந்த பகுதியில் உள்ள குற்றியாடி ஆற்றின் கரையோரம் புதுமண தம்பதியரை போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் திரண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினர்.. அதற்கு பிறகு, குடும்பத்தினரின் விருந்து நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டது..

தவறி விழுந்தனர்
பிறகு, நேற்று புதுமண தம்பதிகள் மறுபடியும் இதே குற்றியாடி ஆற்றங்கரையோர பகுதிக்கு போட்டோ ஷூட் எடுக்க வந்திருக்கிறார்கள்.. குற்றியாடி ஆற்றின் கரையோர பகுதியில் தம்பதியை நிற்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது.. அந்த நேரம் பார்த்து, மணமக்கள் இருவருமே ஆற்றில் தவறி விழுந்துவிட்டனர்.. இருவருக்குமே நீச்சல் தெரியாது என்பதால் அவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்து கதறினர்..

நீச்சல்
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடிச்சென்று ஆற்றில் தம்பதி இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்... உடனடியாக அருகில் உள்ள மலபார் மருத்துவமனையிலும் சேர்த்தனர்... ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாப்பிள்ளை பரிதாபமாக இறந்துவிட்டார்.. கணிகா தீவிர சிகிச்சையில் உள்ளார்.. உடல்நிலை சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி அப்பகுதி சொல்லும்போது, இந்த குற்றியாடி ஆறு என்பது ஆபத்தான இடமாகும்..

ஆபத்தான இடம்
அதிலும் மணமக்கள் இருவரும் நின்ற பகுதி இருப்பதிலேயே ஆபத்து அதிகம் நிறைந்த இடமாகும்... ஏற்கனவே, இதே இடத்தில் எத்தனையோ பேர் தவறி ஆற்றில் விழுந்து இறந்துள்ளனர்.. இவர்களுக்கு இந்த விவரம் தெரியாது என்பதால் ஆர்வத்தில் போட்டோ எடுத்துள்ளனர் என்று வேதனையுடன் கூறினார்கள்...

போட்டோ ஷூட்
தகவலறிந்த போலீசார், ரெஜின்லால் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஆனால், ரெஜின்லால் ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவத்திற்கு போட்டோ ஷூட் காரணமில்லை என்று குடும்பத்தினர் சொல்கிறார்களாம்.. அதனால் தொடர் விசாரணை நடக்கிறது.. வெறும் 20 நாளில் மாப்பிள்ளை இறந்த நிலையில், புதுமணப்பெண் உட்பட அந்த குடும்பமே கதிகலங்கி நிற்கிறது..!
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications