நரபலிக்கு முன்னாடி 2 பெண்களையும்.. வாக்குமூலத்தில் "உடைத்த" கொலைகாரன்.. கேட்ட நொடியே மிரண்ட போலீஸ்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற நரபலி தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலையாளி சாபி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் பல பரபரப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.
இரண்டு நரபலி.. அதற்கு பின் போடப்பட்ட திட்டங்கள்.. நரபலி அரங்கேற்றப்பட்ட விதம்.. நரமாமிச விருந்து என்று கேரளாவில் நடைபெற்ற நரபலிகள் இந்த நாட்டையே உலுக்கி உள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தி சேர்ந்தவர்கள் பத்மம் மற்றும் ரோஸ்லி. இவர்கள் இருவருமே அங்கு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும்தான் சாபி என்ற இளைஞரால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது.

இதில் பத்மம் கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்மம் தமிழ் பெண் ஆவார்!
இந்த நிலையில் அந்த பெண்ணை கொலை செய்வதற்கு முன் வன்புணர்வு செய்ததாக சாபி வாக்குமூலம் கொடுத்துள்ளார். போலீசார் தற்போது சாபியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சாபி பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை தெரிவித்து வருகிறார். அதாவது அந்த பெண்களை எப்படி அழைத்து வந்தார். அவர்களை எப்படி கொலை செய்தார் என்பது உள்ளிட்ட வாக்குமூலங்களை அவர் அளித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று சாபி போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், அந்த இரண்டு பெண்களையும் கொலை செய்வதற்கு முன் வன்புணர்வு செய்தேன். இரண்டு போரையும் ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்று அவர்களை வன்புணர்வு செய்தேன். அதன்பின்தான் அவர்களை நரபலி கொடுக்க அழைத்து சென்றேன். அவர்களை கட்டி வைத்து உடல் உறவு கொண்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் மிரண்டு போனதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாக்குமூலத்தில் அவர் தன்னுடைய ஹோட்டலில் வேறு ஒரு ஆண் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். அந்த ஆண் யார், இவர் ஏன் ஹோட்டலுக்கு போனார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாபி அந்த இரண்டு பெண்களையும் கொலை செய்யும் போது அவர்களின் பெண் உறுப்பில் கத்தியால் கீறியது குறிப்பிடத்தக்கது. உட்பக்கம் எல்லாம் கத்தியால் குத்தப்பட்டு இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அந்த பெண்களை வன்புணர்வு செய்தேன் என்றும் சாபி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இது போக சில பாலியல் தொழிலாளிகளுடனும் இவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில பாலியல் தொழிலாளிகளை இவர் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. அதை பற்றியும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சாபிக்கு எதிராக போலீசில் வன்புணர்வு வழக்கு ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சாபி இந்த கொலைகளை பணத்திற்காக செய்ததாகவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இவரிடம் வங்கி கணக்கு எதுவுமே இல்லை. அதேபோல் இவரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி என்றால் கொலை செய்யும் திருப்திக்காக மட்டுமே இவர் இந்த குற்றங்களை செய்து வந்துள்ளார்.

ஏற்கனவே இவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு அனுபவத்திற்காக.. 75 வயது பெண்ணை கூட இவர் வன்புணர்வு செய்து இருக்கிறாராம்.
2020ல் 75 வயது பெண்ணை வன்புணர்வு செய்த இவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில்.. சும்மா ஒரு அனுபவத்திற்காக செய்தேன் என்று கூறி இருக்கிறார். அப்போது இவர் லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். சாலையில் சென்ற 75 வயது பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்துள்ளார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications