திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் நாள் திருமணம்.. மறுநாள் தோழியுடன் மணப்பெண் ஓட்டம்.. அதிர்ச்சியில் மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த மறுநாள் புதுமணத்தம்பதிகள் இருவரும் அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். புதுமாப்பிள்ளை வங்கிக்குள் நின்று கொண்டிருந்தார். புதுப்பெண் போன் செய்து விட்டு வருவதாக கூறி கணவரின் செல்போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.

மேல்மலையனூர் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து - சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லைமேல்மலையனூர் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து - சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

புதுப்பெண் மாயம்

புதுப்பெண் மாயம்

மனைவி நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த புதுமாப்பிள்ளை வெளியே வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. பின்னர் வீட்டுக்கு சென்றபோதிலும் மாலை வரை இளம்பெண் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வந்தனர்.

தோழியுடன் ஓட்டம்

தோழியுடன் ஓட்டம்

போலீசாரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது புதுப்பெண் தனது தோழி ஒருவருடன் வீட்டை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது. அதாவது புதுமணப்பெண்ணும், அவரது தோழியும் ஒருவரை ஒருவர் பிரியமுடியாதபடி மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று புதுப்பெண் வங்கியில் இருந்து எடுத்த ரூ.1 லட்சம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார்.

மதுரை வந்தனர்

மதுரை வந்தனர்

இருவரும் மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. இதுபற்றி தகவல் கிடைத்த மணப்பெண்ணின் தோழியின் தந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தோழியின் தந்தை போலீசாருடன் மதுரைக்கு சென்று அந்த லாட்ஜில் காத்திருந்தார். வெளியே சென்றிருந்த புதுப்பெண்ணும், தோழியும் மீண்டும் அந்த லாட்ஜ்க்கு வந்தனர். தனது தந்தையும், அவருடன் இருந்த போலீசாரையும் பார்த்து அதிர்ச்சி பெண்ணின் தோழி அடைந்தார்.

ஜாலியாக சுற்றியுள்ளனர்

ஜாலியாக சுற்றியுள்ளனர்

தப்பி ஓட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். நெருக்கமாக பழகி வந்த தோழிகள் இருவரும் 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதற்காக பணம் தேவைப்படும் என்பதால் திருமணம் வரை காத்திருந்துள்ளனர். இதனால் திருமணம் முடிந்த மறுநாள் பணத்தையும், நகையையும் எடுத்துக் கொண்டு இருவரும் ஸ்கூட்டரில் திருச்சூருக்கு சென்றுள்ளனர். பின்னர் ரெயில் நிலையத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வாடகை காரில் ஜாலியாக சென்று புத்தாடைகளை வாங்கி உள்ளனர்.

அறிவுரை கூறி அனுப்பிய போலீசார்

அறிவுரை கூறி அனுப்பிய போலீசார்

வாடகை காருக்கு பணம் கொடுக்காமல் வேறு ஒரு வாடகை காரை பிடித்துக்கொண்டு கோட்டயம் சென்று ரயில் மூலம் சென்னைக்கு சென்றுள்ளனர். பின்பு அங்கிருந்து மதுரைக்கு சென்று லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பின்னர் மீண்டும் ரயில் மூலம் திருச்சூர் வந்து பல இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து மீண்டும் ரயில் மூலம் மதுரைக்கு வந்து அதே லாட்ஜில் தங்கி உள்ளனர். இந்த லாட்சுக்கும் அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. புதுப்பெண்ணையும், அவரது தோழியையும் அழைத்து போலீசார் அறிவுரைகள் கூறி உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை

மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை

புதுப்பெண்ணுடன் சென்ற தோழியும் திருமணமாகி 15 நாளில் கணவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆசையுடன் திருமணம் செய்து கொண்ட மனைவி தோழியுடன் ஓட்டம் பிடித்ததை கேட்டதும் புதுமாப்பிள்ளை அதிர்ச்சியில் உறைந்துபோய் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை திருச்சூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

English summary
The husband fainted in shock as the bride went with her girl friend the day after the wedding. The bride and her friend were called and sent with relatives to the police for advice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X