15 ஆண்டில் முதல்முறை.. கேரளாவில் யூத முறைப்படி அமெரிக்க நாசா பொறியாளரை திருமணம் செய்த போலீஸ் மகள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அமெரிக்காவை சேர்ந்த நாசாவில் பணிபுரியும் பொறியாளரை கேரள மாநிலம் கொச்சியில் மலையாள பெண் விஞ்ஞானி ஒருவர் யூத மத முறைப்படி திருமணம் செய்து இருக்கிறார்.

கேரளாவை சேர்ந்தவர் ரகேல். அமெரிக்காவில் தகவல் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்த இவரது தந்தை பினாய் மலகாய், கேரள காவல்துறையில் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அவரது தாய் மிரியம் இம்மானுவேல் மருத்துவ உளவியலாளராக உள்ளார்.

Jewish wedding held in Kerala after 15 years between US Nasa engineer and Malayali

இந்த நிலையில் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ரகேலுக்கும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான (NASA) வில் பொறியாளராக பணிபுரியும் அந்த நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஜசாரி ரோவே என்பவருக்கும் யூத மத பாரம்பரிய முறைப்படி கேரள மாநிலம் போர்ட் கொச்சியில் திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்த திருமணத்தை இஸ்ரேலை சேர்ந்த யூத மதகுரு ரப்பி ஏரியல் டைசன் என்பவர் தலைமையேற்று நடத்தி வைத்து இருக்கிறார். கொச்சியில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்தை காண ஏராளமானோர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர். கேரள மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளில் யூத மத முறைப்படி நடக்கும் முதல் திருமணம் இதுவாகும்.

எனவே இதனை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் எழுந்தது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் கேரளாவில் ஆங்காங்கே யூதர்களும் மிகவும் குறைவான எண்ணிக்கை வாழ்ந்து வருகின்றனர். யூதர்கள் வழிபடும் சினனாக் என்ற வழிபாட்டு தளங்களும் கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. ஆனால், 15 ஆண்டுகளில் நடைபெறும் முதல் யூத திருமணம் என்று அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

Jewish wedding held in Kerala after 15 years between US Nasa engineer and Malayali

அதே நேரம் இந்த திருமணம் சினனாகில் நடைபெறவில்லை. இதுகுறித்து மணமகள் ரகேலின் பெற்றோர் தெரிவிக்கையில், "இந்த திருமண நிகழ்வை சினனாகில் வைத்தால் மணமகன் மற்றும் மணமகளின் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து இருக்க முடியும். அனைவரும் இந்த திருமண சடங்குகளை காண வேண்டும் என்பதற்காகவே ரிசார்ட்டில் நடத்தினோம்." என்றனர்.

கேரளாவில் சினனாக்குகள் பாதுகாக்கப்பட்ட வரலாற்று தளங்களாக கருதப்படுகின்றன. இந்த திருமண நிகழ்விற்கு தலைமை தாங்கிய யூத மதகுரு ரப்பி, 'கெடுபா' எனப்படும் திருமண ஒப்பந்தத்தை மணமகன் மற்றும் மணமகள் முன்னிலையில் வாசித்தார். அதன் தொடர்ச்சியாக இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொண்டார்கள்.

அதை தொடர்ந்து இருவரும் ஒரு கண்ணாடியை காலால் மிதித்து உடைத்து தங்கள் திருமண வாழ்க்கையை தொடங்கினர். திருமணத்துக்காக யூத பாரம்பரிய முறைப்படி மணமகன் ரிச்சர்ட் 'டல்லிட்' எனப்படும் அங்கியை அணிந்து இருந்தார். மணமகள் ரகேல் வெள்ளை நிற புடவை அணிந்து இருந்தார்.

Jewish wedding held in Kerala after 15 years between US Nasa engineer and Malayali

இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அமெரிக்காவை சேர்ந்த யூதர்கள், இந்தியர்கள் அணியும் பாரம்பரிய உடையுடன் காணப்பட்டனர். இறுதியாக ஹீப்ரு மொழி பாடல் இசைக்கப்பட்டு அதற்கு மணமகன் மற்றும் மணமகள் நடனம் ஆடினர். இந்த விழாவில் மணமகன் ரிச்சர்ட் குடும்பத்தை சேர்ந்த 20 பேர் கலந்துகொண்டார்கள்.

இதில் யூத மத சட்டங்களின் அடிப்படையிலேயே உணவும் தயாரித்து பரிமாறப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் யூத மதத்தை சேர்ந்த 25 பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டு யூத மத முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது ரிச்சர்டும் ரகேலும் திருமணம் செய்துகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+