நிபா, கொரோனாவை ஒழித்து 5 ஆண்டுகள் உலகையே தன் பக்கம் திருப்பியவர்.. கேரளா சைலஜாவுக்கு பெருகும் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநில அமைச்சரவை பட்டியலில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த கே கே சைலஜா இடம்பெறாத நிலையில் அவர் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் என சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

Recommended Video

    Kerala புதிய அமைச்சரவையில் K K Shailja-விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.. மக்கள் அதிர்ச்சி

    கடந்த ஆண்டு கேரளாவில் கொரோனா வைரஸை திறம்பட கையாண்டதில் பெரும் பங்கு வகித்தவர் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா. இவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

    இந்த முறை நடந்து முடிந்த தேர்தலில் இவர் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கேரளாவில் இடதுசாரிகளே மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர்.

    இரண்டாவது அலை

    இரண்டாவது அலை

    தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை பெற்று வரும் நிலையில் இந்த முறையும் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி சைலஜாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் கட்சியின் விதிகளின் படி ஏற்கெனவே பதவி வழங்கப்பட்டவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படாது என்ற விதியுள்ளது.

    சைலஜா

    சைலஜா


    இந்த விதிகளின்படி சைலஜா உள்பட முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும் சைலஜாவுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.

    அமைச்சரவை

    அமைச்சரவை

    இதுகுறித்து நடிகை ரீமா கல்லீங்கல் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் என்ன பிரச்சினை? சைலஜா போட்டியிட்ட தொகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளார். 5 ஆண்டுகள் உலகமே உற்று நோக்கும் வகையில் சேவைகளை செய்த சைலஜாவுக்கு அமைச்சரவையில் இடம் தரமுடியாவிட்டால் உங்களால் யாருக்கு இடம் தர இயலும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெண்ணியவாதிகள்

    பெண்ணியவாதிகள்

    கேரளாவை சேர்ந்த பல பெண்ணியவாதிகள் சைலஜாவுக்கு சமூகவலைதளங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். #bringourteacherback, #BringBackShailajaTeacher ஆகிய ஹேஷ்டேகுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+