"என் உயிருக்கு ஆபத்து.. விரட்டி விரட்டி அடிக்கிறாங்க".. பிந்து அம்மிணி பரபரப்பு குற்றச்சாட்டு
கேரளாவை விட்டு வெளியேற போவதாக பிந்து அம்மிணி அறிவித்துள்ளார்
திருவனந்தபுரம்: தன் உயிருக்கு ஆபத்து என்றும், தன்மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டே வெளியேற போவதாகவும் பிந்து அம்மிணி பரபரப்பு புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடையை சுப்ரீம்கோர்ட்டும் 4 வருடங்களுக்கு முன்பு நீக்கியது.
இதையடுத்து வழக்கறிஞர் பிந்து அம்மிணி, கனக துர்க்கா என்ற 2 இளம் பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் அந்த சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தனர்.

தாக்குதல்கள்
இந்த நிகழ்வுக்கு 2 பேருக்குமே கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன.. அதனால் 2 பேருமே தலைமறைவாக இருந்து வந்தனர்.. இதனிடையே, பிந்து அம்மிணிக்கு எதிராக 2 முறை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், கோழிக்கோட்டில் நேற்று மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. தன்னுடைய வழக்கு தொடர்பாக கோழிக்கோடுக்கு சென்றுள்ளார்... கோழிக்கோடு வடக்கு கடற்கரைக்கு சென்ற அவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி சராமரியாக அடித்திருக்கிறார்..

தாக்குதல்
இதில் நிலைதடுமாறி பிந்து அம்மிணி கீழே விழுந்த நிலையில், அப்போதும் அவரை ஒருவர் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.. இந்த காட்சிகள் அனைத்தும் டிவியில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிந்து அம்மிணி போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் விசாரணையை மேற்கொண்டனர்.. பிந்து அம்மினியை தாக்கியவர் பெயர் மோகன்தாஸ் என்பது தெரியவந்துள்ளது.

அதிரடி கைது
அவர் கோழிக்கோடு தொட்டியில் பகுதியை சேர்ந்தவர் என்றும், அப்போது அவர் மது போதையில் இருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.. இறுதியில், பேப்பூரை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், பிந்து அம்மிணி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, பரபரப்பு தகவல்களை அளித்தார்.. அப்போது, "இங்கே கேரளாவில் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது.. என் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இங்கே இல்லை... தொடர்ந்து என்மீது தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.. நான் பெண் என்பதாலும், ஒரு தலித் என்பதாலும் இப்படியெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறது..

பரபரப்பு
இதுக்கெல்லாம் காரணம் சங் பரிவார் அமைப்புகள் தான்.. எனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டும் கொயிலாண்டி போலீஸ் எந்த பாதுகாப்பும் தரவில்லை.. இந்த விவகாரத்தில் பக்தர்களின் ஆதரவும் எனக்கு தேவைப்படுகிறது.. இப்படியான தொடர் தாக்குதல் காரணமாக, என்னால் கேரளாவில் வாழ முடியவில்லை.. அதனால் இந்த மாநிலத்தை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications