Dileep: கேரள நடிகை பாலியல் வழக்கு! நடிகர் திலீப் விடுதலை! முன்கூட்டியே லீக்கான தீர்ப்பு?
திருவனந்தபுரம்: கேரள நடிகை மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, அந்தத் தீர்ப்பு கசிந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானார். இந்த வழக்கில் நடிகர் திலீப்பின் பெயரும் சேர்க்கப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்தார்.

இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்த தீர்ப்பு கடந்த 8ஆம் தேதி வெளியானது. அப்போது திலீப்பிற்கு என்ன மாதிரியான தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 1 முதல் 6 வரையிலான ஏ1 டூ ஏ6 மட்டுமே குற்றவாளிகள் என நீதிபதி ஹனி வர்கீஸ் தீர்ப்பளித்தார். மேலும் 7ஆவது குற்றவாளி சார்லி தாமஸ், 8ஆவது குற்றவாளி திலீப் உள்ளிட்டோர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் கேரள திரையுலகை சேர்ந்த நடிகைகளான பார்வதி நாயர், ரேவதி உள்ளிட்டோரும் இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்து பாதிக்கப்பட்ட நடிகைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றனர்.
பாதிக்கப்பட்ட நடிகை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளார். இந்த நிலையில் இந்த தீர்ப்பு முன்கூட்டியே லீக்கானதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் 2ஆம் தேதியே தபால் மூலம் ஒரு மர்ம கடிதம் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கிடைத்தது.
அந்த கடிதத்தில், "நடிகை பலாத்கார வழக்கில் 7ஆவது குற்றவாளியான சார்லி தாமஸ், 8ஆவது குற்றவாளியான திலீப், 9ஆவது குற்றவாளியான சனில்குமார் ஆகியோர் விடுதலையாவார்கள். மற்ற 6 பேருக்கு மட்டுமே குற்றவாளிகள் என அறிவிக்கப்படுவார்கள்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதம் எங்கிருந்து வந்தது, யார் எழுதியது என தெரியவில்லை, ஆனால் "இந்திய குடிமகன்" என்று மட்டும் இருந்தது.
இதையடுத்து கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் (KHCAA) யஷ்வந்த் ஷெனோய், அந்த கடிதத்தை தலைமை நீதிபதிக்கு அக்டோபர் 8 ஆம் தேதி அனுப்பினார். நீதித்துறையின் நேர்மையைக் காக்கும் கடமை தனக்கு இருப்பதாகவும், அதனாலேயே இதை அனுப்புவதாகவும் அவர் விளக்கினார்.
அந்தக் கடிதத்தில், வழக்கை விசாரித்த நீதிபதியைப் பற்றி இழிவான கருத்துகள் எழுதப்பட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தன் குறிப்பில் குறிப்பிட்ட தலைவர் ஷெனோய், வழக்கின் இறுதித் தீர்ப்பு எப்படி இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications