கேரளா: 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு- பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை!
திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய கேரளாவின் ஆலுவாவில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான பீகார் இளைஞர் அஸ்பக் ஆலமுக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது கேரளா நீதிமன்றம்.
கேரளா மாநிலம் ஆலுவாவில் பீகாரை சேர்ந்த இளைஞர் அஸ்பக் ஆலம் வசித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை குப்பை தொட்டியில் வீசி சென்றார் அஸ்பக் ஆலம்.

கேரளாவை மட்டுமல்ல நாட்டையே இந்த சம்பவம் கடுமையாக உலுக்கியது. கடந்த ஜூலை 5-ந் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. சிசிடிவி காட்சிகள் உதவியுடன் உடனடியாக பீகார் இளைஞர் அஸ்பக் ஆலம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அஸ்பக் ஆலம் கைது செய்யப்பட்ட 26 நாட்களில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்றது.
கேரளாவின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 100-வது நாளில் விசாரணை நிறைவடைந்தது. இந்த விசாரணைகளின் முடிவில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பீகார் இளைஞர் அஸ்பக் ஆலம் குற்றவாளி என கடந்த வாரம் கேரளா எர்ணாகுளம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று அஸ்பக் ஆலம் தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவித்தது. ஆலுவாவில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற அஸ்பக் ஆலமுக்கு கேரளா போக்சோ நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
-
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications