பாஸ்போர்ட் கவர் ஆர்டர் போட்டவருக்கு நிஜ பாஸ்போர்ட் அனுப்பிய அமேசான்.. பின்னணியில் நடந்த ட்விஸ்ட்!
திருவனந்தபுரம்; கேரளாவில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த நபர் ஒருவருக்கு நிஜ பாஸ்போர்ட் ஒன்று அமேசான் நிறுவனம் மூலம் டெலிவரி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் வசித்து வருபவர் மிதுன் பாபு. சமீபத்தில் பாஸ்போர்ட் வாங்கிய இவர் அதை வைப்பதற்காக கவர் ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன் அவருக்கு பாஸ்போர்ட் கவர் டெலிவரி செய்யப்பட்டள்ளது.

அதிர்ச்சி
இந்த நிலையில் டெலிவரி செய்யப்பட்ட பாஸ்போர்ட் கவரை திறந்து பார்த்து மிதுனுக்கு அதிர்ச்சி. பாஸ்போர்ட் கவருக்கு உள்ளே உண்மையில் ஒரு பாஸ்போர்ட் இருந்துள்ளது. முதலில் இது டம்மி பாஸ்போர்ட் என்று மிதுன் நினைத்து இருக்கிறார். ஆனால் உள்ளே இருந்தது உண்மையான பாஸ்போர்ட்.

புகார்
இதையடுத்து உடனடியாக அமேசான் டெலிவரி நிறுவனத்திற்கு மிதுன் போன் செய்து புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்களோ.. சாரி இனிமேல் இப்படி நடக்காது என்று கூறியுள்ளனர். மாறாக அந்த பாஸ்போர்ட்டை உரியவர்களிடம் கொடுப்பதற்கான என்ற முயற்சியும் செய்யவில்லை. அதற்கான உதவியையும் செய்யவில்லை.

என்ன செய்தார்?
இதனால் குழம்பிப்போன மிதுன் பாஸ்போர்ட்டில் இருக்கும் அட்ரஸை வைத்து முகமது சலியா என்ற அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளரிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளார். முகமது சலியாவும் கேரளாவை சேர்ந்தவர்தான். இவர் சில நாட்களுக்கு முன் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்துவிட்டு, அதில் பாஸ்போர்ட்டை வைத்து சோதனை செய்துள்ளார்.

சோதனை
அதன்பின் கவர் சரியில்லை என்றதும் பாஸ்போர்ட்டை எடுக்க மறந்துவிட்டு அப்படியே ரிட்டர்ன் செய்துள்ளார். இதை அமேசான் அதிகாரிகளும் சோதனை செய்யாமல் வாங்கி வைத்துவிட்டு புதிய ஆர்டர் வந்ததும், அவருக்கு டெலிவரி செய்துள்ளனர். பின்னணியில் நடந்த இந்த சம்பவம்தான் குழப்பங்களுக்கு காரணம். இப்படித்தான் முகமது சலியாவின் பாஸ்போர்ட் மிதுன் கைக்கு வந்துள்ளது.

அதிர்ச்சி
அமேசான் அதிகாரிகள் இப்படி சோதனை செய்யாமல் பாஸ்போர்ட் ஒன்றை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. அமேசான் அதிகாரிகள் இதை பற்றி புகார் கொடுத்த போது சரியாக பதில் அளிக்கவில்லை என்று மிதுன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications