கேரளா சட்டசபை தேர்தல்.. குட்டி மாநிலத்தில் இத்தனை கோடிஸ்வரர்களா? வேட்பாளர்களின் பின்னணி
திருவனந்தபுரம்: பொதுவாக கேரளாவில் ஊழல்கள் அதிகம் இல்லை.. அங்கே அரசியல்வாதிகள் அவ்வளவு பெரிய பணக்காரர்கள் இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் நிலவுவது உண்டு. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் இன்று நடக்கும் சட்டசபை தேர்தலில் மட்டும் எத்தனை கோடிஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் 140 இடங்களுக்கான முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தொடர்ந்து 3வது முறையாக வெல்லும் முனைப்பில் இருக்கிறது.. தனது சமூக நலத்திட்டச் சாதனைகளை முன்னிலைப்படுத்தி இடதுசாரிகள் பிரச்சாரம் மேற்கொண்டது. மறுபுறம், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா தலைமையிலான காங்கிரஸ் நிர்வாக ஊழல்களையும் முன்வைத்து பிரச்சாரம் செய்தது.

பாஜகவும் அங்கு ஆட்சியை அமைக்கும் ரேஸில் பாஜக இல்லை என்றாலும் ஓரிரு இடங்களில் வெல்ல வேண்டும் என நினைகிறது. இதன் காரணமாகவே ராஜீவ் சந்திரசேகர் போன்ற முக்கிய வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது. கேரளாவில் 985 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. கேரளாவில் இதற்கு முன்பு இவ்வளவு வேட்பாளர்கள் களமிறங்கியதே இல்லை. அனைத்து தரப்பினரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பெரியார் புலிகள் சரணாலயம் போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது.
சம்பளக் கணக்கு: தமிழகம் Vs கேரளா
தமிழகத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமித்த குரலில் கைகோர்த்து, தங்கள் சம்பளத்தை 55,000 ரூபாயிலிருந்து 1.05 லட்சமாக உயர்த்திக்கொண்டனர். ஆனால் கேரள எம்.எல்.ஏ-க்களின் நிலைமை கொஞ்சம் 'டைட்' தான்.
கேரளாவில் ஒரு எம்.எல்.ஏ-வின் அடிப்படை ஊதியம் வெறும் 2,000 ரூபாய் மட்டுமே. இதனுடன் தொகுதிப்படி (₹25,000), பயணப்படி (₹20,000), தொலைபேசிப்படி (₹11,000), தகவல் படி (₹4,000) மற்றும் இதர படிகள் என எல்லாம் சேர்த்தால் மாதத்திற்கு கைக்கு வருவது 70,000 ரூபாய்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ-க்கள் எங்கே?
தெலங்கானா: ₹2.50 லட்சம் (டாப்!)
பீகார்: ₹1.65 லட்சம்
மகாராஷ்டிரா: ₹1.60 லட்சம்
குறைந்த சம்பளம்: திரிபுரா மற்றும் மேகாலயா (₹20,000)
சம்பளம் குறைவு... ஆனால் சலுகைகள்?
சம்பளம் குறைவாக இருந்தாலும், கேரள எம்.எல்.ஏ-க்களுக்கு ரயில் பயணச் செலவுக்காக சுமார் 4 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது. இதுதவிர, சொந்தக் காரில் சென்றால் கிலோமீட்டருக்கு 10 ரூபாய் பெட்ரோல் படி, 40 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு, வட்டி இல்லாத கார் கடன் என சலுகைகள் ஏராளம். இவர்களது சம்பளத்தை உயர்த்த 'நீதிபதி ஜேசி கமிட்டி' பரிந்துரை செய்தும், பொருளாதார மந்தநிலை மற்றும் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு அரசு அதைத் தள்ளி வைத்துள்ளது.
தேர்தல் களம்: கோடீஸ்வரர்களின் சங்கமம்!
சம்பளம் ஒருபுறம் இருக்கட்டும், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பைப் பார்த்தால் தலைசுற்றுகிறது. களத்தில் உள்ள 863 வேட்பாளர்களில் 221 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 39 சதவீத வேட்பாளர்கள் ஒரு கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். 2021-ல் இது 27 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாப் 5 கோடீஸ்வர வேட்பாளர்கள்:
ரெஜி செரி (UDF, குட்டநாடு): ₹218+ கோடி (பட்டியலில் முதலிடம்!)
ராஜசேகரன் நாயர் (BJP, நெய்யாற்றின்கரை): ₹116+ கோடி
ராஜீவ் சந்திரசேகர் (BJP, நேமம்): ₹111+ கோடி
ஷிபு தெக்கும்புறம் (Congress, கோதமங்கலம்): ₹68 கோடி
பி.வி. அன்வர் (சுயேச்சை/LDF ஆதரவு, பேப்பூர்): ₹65 கோடி உள்ளிட்ட பல கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள்.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications