மனைவியுடன் பழக எதிர்ப்பு.. பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கதி.. திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்.. போச்சு
திருவனந்தபுரம்: கேரளாவில் தனது மனைவியுடன் பழக எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரமுகரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இந்த கொலைக்கு பிறகு அவர் நாட்டு துப்பாக்கியுடன் போட்டோவை பேஸ்புக்கில் போட்டு பதிவிட்ட கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் கைதாபிராம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 51). ஆட்டோ டிரைவராக உள்ளார். மேலும் பாஜக பிரமுகராக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது ராதாகிருஷ்ணன் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்றைய தினம் மாலையில் ராதாகிருஷ்ணன் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது ராதாகிருஷ்ணன் உடன் யாரும் இல்லை.
இதற்கிடையே தான் திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அப்போது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் ராதாகிருஷ்ணன் தோட்டா பாய்ந்து இறந்து கிடந்தார். அவரது மார்பு பகுதியில் தோட்டா இறங்கி இருந்தது. அவர் இறந்து கிடந்தார்.
மேலும் துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது யார்? எதற்காக சுட்டு கொன்றனர்? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது தான் சந்தோஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அதாவது பெரும்பாடவு பகுதியை சேர்ந்த சந்தோஷ் திருமணம் செய்து கொள்ளவில்லை. ராதாகிருஷ்ணனின் மனைவியும் சந்தோஷும் ஒன்றாக படித்தவர்கள். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே பழக்கம்
என்பது இருந்தது. சந்தோஷ் தனது மனைவியிடம் பேசுவது ராதாகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை இருப்பது தெரியவந்தது.
இதனால் சந்தோசை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது சந்தோஷ் தான் ராதாகிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. மேலும் சந்தோஷ், அடிக்கடி தனது பேஸ்புக் பக்கத்தில் ராதாகிருஷ்ணனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் போஸ்ட்டுகளை பதிவிட்டதும், கொலை நடந்த பிறகும் கூட பேஸ்புக்கில் சந்தோஷ் நாட்டுத்துப்பாக்கியுடன் போஸ்ட் போட்டதும் தெரியவந்தது. கொலைக்கு முன்பாக சந்தோஷ், ‛‛டார்க்கெட்டை குறிவைக்கும் நேரம் வந்துவிட்டது. நிச்சயமாக டார்க்கெட்டை வீழ்த்துவேன்'' என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு கொலை செய்த பிறகு நாட்டுத்துப்பாக்கியுடன் உள்ள படத்தை பகிர்ந்து, ‛‛நான் உன்னிடம் சொன்னேன் தானே? எனது Girl-க்காக நான் எதையும் செய்வேன் என்று கூறினேன் அல்லவா? என் வாழ்க்கையை சீரழித்தால் கூட விட்டுவிடுவேன். ஆனால் என்னுடையவளின் வாழ்க்கையை சீரழித்தால் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன்'' என்று எழுதியிருந்தார். தற்போது சந்தோஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications