தேர்தலில் வெற்றி பெற.. வெளி மாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்ப்போம்! பாஜக தலைவர் பகீர்
திருவனந்தபுரம்: வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற வெளிமாநிலத்தவர்களை வாக்காளர்களாக இணைப்போம் என கேரள பாஜக தலைவர் கூறியிருக்கிறார். இது புதிய விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
கேரளாவின் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக ஆட்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறது. இந்த புகார்களுக்கு மத்தியில், தேர்தல்களில் வெற்றிபெற தங்கள் கட்சி வாக்காளர்களைச் சேர்ப்பது தொடரும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் பி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் வெற்றிபெற விரும்பும் தொகுதிகளில், தேர்தல்களில் வெற்றிபெற அதிக அளவில் வாக்காளர்களைச் சேர்ப்போம். காஷ்மீரிலிருந்து கூட வாக்காளர்களை வரவழைத்து, ஒரு வருடம் தொகுதியில் தங்க வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்போம். கேரளாவில் போட்டியிடும் நான் வெற்றிபெற, காஷ்மீரில் இருந்து ஒருவர் விரும்பினால் என்ன தவறு? அவர் ஜம்முவிலிருந்து வந்து எனக்கு வாக்களிக்கலாம். இதில் தவறில்லை" என்று கூறியிருக்கிறார்.
அடுத்து வரும் கேரள சட்டமன்றத் தேர்தல் குறித்து பாஜக-வுக்கு திட்டங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு, "அது குறித்து பின்னர் முடிவெடுப்போம்" என்று பதிலளித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் கேரளாவில் பாஜக வென்ற ஒரே தொகுதி திருச்சூர் ஆகும். இது சுரேஷ் கோபியை கேரள வரலாற்றில் முதல் பாஜக எம்.பி. ஆக்கியது. திருச்சூரில் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னரும் பின்னரும், இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆகியன திருச்சூர் மாவட்ட ஆட்சியரிடம் பல புகார்களை அளித்தன.
இந்த புகார்களின்படி, நிரந்தர வசிப்பவர்கள் அல்லாதவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது உள்ளூரில் அறியப்படாத நபர்களின் பெயர்களில் வாக்காளர்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராகுல் காந்தியின் தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கேரளாவில் UDF மற்றும் LDF ஆகிய இரு கட்சிகளும் திருச்சூர் தொடர்பான குற்றச்சாட்டுகளை மீண்டும் எழுப்பின.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications